மரபணு சோதனை அறிக்கையினை விரைவாக மன்றில் சமர்பிக்க சந்தேக நபர்கள் கோரிக்கை

226

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் பலர் குற்றவாளிகளாக உள்ளதால் தான் மரபணு சோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்க தாமதமாவதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜார் படுத்தப்பட்டனர்.
அதன் போது நீதவான் சந்தேக நபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா ? என கேட்ட போது சந்தேக நபர்களில் ஒருவர் ‘ எமது மரபணுக்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டு பின்னர் மீண்டும் இரண்டாம் தரமாக கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் எடுக்கப்பட்டு இருந்தது.
ஆனா இதுவரையில் மரபணு பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை தென்னிலங்கையில் ஒரு சில வாரங்களிலையே மரபணு சோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்பித்து இருக்கு எனவே எமது மரபணு சோதனை அறிக்கையினை நீதிமன்றில் விரைவாக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த நீதவான் இந்த வழக்கில் பலர் குற்றவாளிகளாக உள்ளதால் தான் மரபணு சோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்பிக்கப்பட கால தாமதம் ஆகுகின்றது. என தெரிவித்தார்.

இரகசியமான முறையில் வாக்கு மூலம் பதிவு.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சாட்சியம் ஒன்றின் வாக்குமூலம்  இரகசியமான முறையில் நீதவான் முன்னிலையில் அளிக்கப்பட்டு உள்ளது.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சாட்சியத்தின் வாக்கு மூலம் பதிவு செய்யபட்டு உள்ளது.
குறித்த சாட்சியம் தனது பாதுக்காப்பினை கருதி தான் வெளிப்படையாக சாட்சியம் அளிக்க முடியாது எனவும், தனது பெயர் விபரங்களை தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்து, தான் இரகசியமான முறையில் மூடிய அறையினுள் நீதவான் முன்னிலையில் வாக்கு மூலத்தை பதிவு செய்ய விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து இரகசியமான முறையில் வாக்கு மூலம் பதிவு செய்யபட்டு உள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை சந்தேக நபர்களின் பாதுகாப்பில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜார் படுத்தப்பட்டனர்.
முன்னைய வழக்கு தவணைகளின் போது சந்தேக நபர்கள் பவள் கவச வாகனம் , விஷேட பொலிஸ் அதிரடி படை , மற்றும் பொலிசாரின் வாகன தொடரணியுடன் பலத்த பாதுகாப்புடனேயே அழைத்து வரப்பட்டனர்.
அத்துடன் மாணவி கொலை வழக்கு நடைபெறும் தினத்தன்று நீதிமன்ற சூழலில் பெருமளவான பொலிஸ் விஷேட அதிரடி படையினர் , கலகம் அடக்கும் பொலிசார் மற்றும் ஆயுதம் தாங்கிய பொலிசார் என பலர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தன.
இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு சந்தேக நபர்கள் விஷேட பொலிஸ் அதிரடிப்படையினரின் ஒரு வாகன பாதுகாப்புடனையே அழைத்து வரப்பட்டனர்.
அத்துடன் நீதிமன்ற சூழலிலும் மிக குறைந்தளவான விஷேட அதிரடிப்படையினரே  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
SHARE