மராட்டிய மாநிலத்தில் சர்ச்சைக்குரிய பெண்சாமியார் ராதே மா மீது மேலும் ஒருவழக்கு-தன் சீடர்களில் ஒருவருடன் உறவு வைத்து கொள்ள வற்புறுத்தினார்.

350

 

மராட்டிய மாநிலத்தில் சர்ச்சைக்குரிய பெண்சாமியார் ராதே மா மீது மேலும் ஒருவழக்கு பதிவுசெய்யப்பட்டு உள்ளது.

மும்பை போரிவிலி பகுதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வருபவர் பெண் சாமியார் ராதேமா (வயது46). சமீபத்தில் இவர் குட்டை பாவாடை அணிந்தபடி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வீடியோ காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இந்தநிலையில் பெண் ஒருவர் ராதேமா மீது காந்திவிலி போலீஸ் நிலையத்தில் வரதட்சணை கொடுமை புகார் செய்யது அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதன் பேரில் போலீசார் பெண் சாமியார் ராதேமா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இரண்டு முறை ராதேமாவிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

மும்பையை சேர்ந்த பெண் சாமியார் ராதேமா பொது இடங்களில் ஆபாசமாகவும், ஒழுங்கீனமாகவும் நடந்து கொண்டதாகவும், இதன்பேரில் அவர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியும் பல்குனி பரம்பாத் என்ற பெண் வக்கீல் ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு ராதேமா மீதான மோசடி, மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தெரியப்படுத்துமாறு ஏற்கனவே போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது.

இவ்வாறு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கித்தவிக்கும் பெண் சாமியார் ராதேமா மீது டி.வி நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளருமான டோலி பிந்திரா பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.  சீடருடன் தன்னை உறவு கொள்ள வற்புறுத்தியதாக டி.வி. நடிகை, பெண் சாமியார் ராதேமா மீது புகார் பரபரப்பு அளித்தார். டி.வி நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளருமான டோலி பிந்திராவின் பரபரப்பு புகாரின் அடிப்படையில் போலீசார் ராதே மா, அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு எதிராக போலீசார் மேலும் ஒருவழக்கை பதிவுசெய்து உள்ளனர்.

ராதேமாவின் சீடர்களில் ஒருவர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். இதுகுறித்து நான் அவரிடம் தெரிவித்தபோது, அவர் என்னை தன் சீடர்களில் ஒருவருடன் உறவு வைத்து கொள்ள வற்புறுத்தினார். மேலும் இதுகுறித்து தனக்கு கொலை மிரட்டலும் வந்தது என்று டோலி பிந்திரா புகார் கொடுத்து இருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக மராட்டிய மாநிலம் வடக்குப்பகுதி கூடுதல் கமிஷனர் பதேக் சிங் பாட்டீல் பேசுகையில், “ராதே மா மற்றும் அவருடைய உதவியாளர் மற்றும் உறவினர்களுக்கு எதிராக இந்திய தண்டனை சட்டம் 294, 354, 506(2), 109, 120 பி  பிரிவின் கீழ் வழக்குப்பதிவுசெய்து உள்ளோ

SHARE