மலையக பகுதிகளில் தைப்பொங்கல் பண்டிகை வெகுவிமர்சியாக கொண்டாட்டம்

305

 

தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்றதமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும்.

 

உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக்கொண்டாடுகின்றனர்.

740ac60c-1dd1-4bac-8aba-692061a9722d 5135d2e4-2266-4225-84f3-653137f27b01

9dd49812-dbd2-4c8d-900a-1a72f7228b56 62e0ad28-9133-434d-9c8f-3e2865dd6c4f 55162700-b308-4eca-b089-b7d8f778715e a0f2f566-277c-4ca7-858f-a0081e84a10a

நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றிதெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்து  இந்நாளில் வழிபடுவார்கள்.

 

ஆண்டுதோறும் இப்பண்டிகை தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதுவழமையாகும்.

 

அந்தவகையில் மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தை பொங்கல் பண்டிகையை 15.01.2016 வெள்ளிக்கிழமை வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.

 

அட்டன் பகுதியில் அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் பிரம்மஸ்ரீ.இ.பூர்ணசந்திரானந்த குருக்கள் தலைமையில் தை பொங்கல் விசேட சமய வழிபாடுகள்நடைபெற்றன.

 

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும்இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

 

அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமைகுறிப்பிடத்தக்கது.

க.கிஷாந்தன்

SHARE