மஹிந்தவின் ஊடகச் செயலாளர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்

244

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடக செயலாளர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் காணப்பட்ட 3000 வீடியோ கசட்களை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பிலேயே, மஹி;ந்த ராஜபக்ஸவின் தற்போதைய ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்டவிடம் இன்றைய தினம் ஹோமகம காவல்துறையினர் வாக்கு மூலமொன்றை பதிவு செய்துள்ளனர்.
வெலிவிட்ட இன்றைய தினம் காலை, காவல் நிலையத்திற்கு சென்று வாக்கு மூலமொன்றை அளித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவில் காணப்பட்ட ஒரு தொகுதி வீடியோ கசட்களை காணவில்லை எனவும் அவற்றை தாம் களவாக எடுத்துச் சென்றுள்ளதாகவும் தற்போதைய ஊடகப் பிரிவினர் முறைப்பாடு செய்துள்ளதாக ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
எனினும், தாம் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி வகித்த காலத்தில் ஊடகப் பிரிவில் பணியாற்றவில்லை எனவும், இணைப்புச் செயலாளராகவே கடமையாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ கசட்கள் காணாமல் போன சம்பவத்துடன் தமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்

SHARE