மஹிந்தவுக்கு சொந்தமான காணி நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பறிமுதல்

470
டீ.ஏ. ராஜபக்ச அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான காணியில் அடிப்படை நிபந்தனைகளை மீறி செயற்பட்டமைக்கு எதிராக, விசேட விசாரணைகள் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த காணியை வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த கூடாதென்பதே டீ.ஏ. ராஜபக்ச அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட அடிப்படை நிபந்தனைகளாகும். எனினும் அதனை மீறி CSN தொலைக்காட்சி நிறுவனம் அமைக்கப்பட்டமை தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபை விசேட விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

டீ.ஏ. ராஜபக்ச அறக்கட்டளைக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் இடையிலான ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளமை சட்டத்தில் எதிர்வரும் நாட்களில் உறுதி செய்யப்பட்டால் குறித்த காணி மீண்டும் பறிமுதல் செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளில் குறித்த கொடுக்கல் வாங்கல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்சவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது தனக்கு ஒன்றும் தெரியாது அனைத்தும் மஹிந்த ராஜபக்சவும் அவரது மகன்மார்களினால் மேற்கொண்டதென அவர் சமர் ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிடம் வாக்குமூலம் ஒன்று வழங்கியிருந்ததாக அதன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மஹிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்ச அரசாங்கத்தின் சாட்சியாளராக நீதிமன்ற செயற்பாடுகளில் செயற்படவுள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவு தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டன.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பத்தரமுல்லையில் அமைந்துள்ள 29 பேர்ச்சஸ் காணி டீ.ஏ.ராஜபக்ச அறக்கட்டளைக்கு 2003ஆம் ஆண்டும் 30 வருடங்களுக்கு குத்தகையின் கீழ் வருடத்திற்கு 163,125 பணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச எதிர்கட்சி தலைவராக செயற்பட்ட 2003ஆம் ஆண்டில் இந்தக் காணியை வழங்குமாறு அக் காலக்கட்டத்தில் மேல் மாகாண பிரதேச அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட எம்.எச்.மொஹமட் கேட்டுக்கொண்டுள்ளமைக்கு இணக்க அமைச்சரவை தீர்மானத்திற்கமைய அந்தக் காணி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அவ்விடத்தை வழங்கும் போது குறித்த சொத்துக்கள் ராஜபக்ச அறக்கட்டளையை தவிர வேறு எதற்கும் பயன்படுத்த முடியாதென ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் ராஜபக்ச அறக்கட்டளைக்கான எவ்வித செயற்பாடுகளும் இடம்பெறாத நிலையில் CSN தொலைக்காட்சி நிறுவனத்தின் பிரதான அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளின் போது இந்த வர்த்தகத்திற்காக மாத்திரம் 3000 லட்சம் ரூபா பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி அரசாங்கம் மாற்றம் ஏற்பட்டதனை அடுத்து ஜனவரி மாதம் 14ஆம் திகதி அவசரமாக CSN தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் ராஜபக்ச அறக்கட்டளைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குறித்த சிரேஷ்ட அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE