மாணவர்களுக்கு ஆபத்தான இடமாக மாறிவரும் வகுப்பறைகள்!

185

பாடசாலையில் உள்ள வகுப்பறைகள் மாணவர்களுக்கு ஆபத்தான இடமாக மாறி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

students_2775395f

விசேடமாக மாணவர்கள் அமரும் கதிரையானது 80 வீதம் மாணவர்களுக்கு பொருத்தமில்லாததும், உடல் நடவடிக்கைகளுக்கு பொருத்தமில்லாத ஒன்றுமானதும் என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் வகுப்பறைக்குள் காணப்படும் சுகாதாரம் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வில் வெளிச்சம், காற்றோட்டம், அமரும் இடம், மேசைகள் மற்றும் கதிரைகள் ஆகியவை மாணவர்களுக்கு பொருந்தாத வகையில் இருப்பதாக தெரிய வந்துள்ளதாக ஆய்வுகளை மேற்கொண்ட வைத்தியர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் கரும்பலகைகளுக்கு அருகில் மாணவர்களை அமரச் செய்வது சுகாதாரத்துக்கு பொருந்தாத விடயம் என்றும், அடிக்கடி மாணவர்களை இடமாற்றி அமரச் செய்வதன் மாணவர்களின் மூலம் மாணவர்களின் சுகாதாரத்தில் அக்கறையுடன் செயற்படலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாணவர்கள் முதுகு வலி, மன ஏற்றத் தாழ்வுகள் உள்ளானவற்றிற்கு முகம் கொடுப்பதாகவும்,குறிப்பாக 35 வீதமான மாணவர்கள் தசை சம்பந்தப்பட்ட நோய்களினால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

SHARE