மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட வேண்டும்

245

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த தாக்குதல் சம்வத்தை அரசாங்கம் மெய்யாகவே கண்டித்தால், சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பிலான புகைப்பட ஆதாரங்கள் வலுவாக காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக இதுவரையில் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து வெளியிடுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு உரிய சந்தர்ப்பத்தை அரசாங்கம் வழங்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற அமர்வுகள் நாடகத்தை போன்று இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஆகியோர் இணைந்து செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

SHARE