மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல் குறித்து பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும்!

239
மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல்கள் குறித்து இன்றும் நாளையும் பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

போராட்டம் நடத்திய, உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது அண்மையில் பொலிஸார் நடத்திய தாக்குதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் இன்றும் நாளையும் தங்களிடமுள்ள தகவல்களை வழங்க முடியும்.

பொலிஸ் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை இந்த மாதம் 15ம் திகதி அளவில் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் தங்களது பரிந்துரைகளுடன் அறிக்கை வெளியிடுவார்கள் என ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

மோதல் சம்பவம் குறித்த தகவல்களை இன்றும் நாளையும் பொதுமக்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE