மார்பக புற்றுநோயை தடுக்கும் உணவுகள்

133

தற்கால பெண்களை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்று தான் மார்பக புற்றுநோய்.

மார்பக புற்றுநோய் என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும், இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும்

இது ஆண்களை விட 100 மடங்கு அதிகமாக பெண்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

உணவு முறை மூலம் நாம் எளிதில் இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அவை எந்த உணவுகளை சாப்பிட்டால் மார்பக புற்றுநோயை தடுக்க முடியும் என்று தெரிந்து கொள்வோம்.

ஆளிவிதை

ஆளி விதையை முழுமையாகவோ, உடைத்தோ அல்லது எண்ணெய்யாகவோ உணவில் சேர்த்து கொள்ளலாம். இதில் உள்ள லிக்னன எனும் வேதிப்பொருள் மற்றும் ஃபைபர் புற்று நோய் ஏற்படுத்தும் செல்களுக்கு எதிராக செயல்படுகின்றன. ஆளி எண்ணெய்யை சாலட் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

பிரேசில் நட்ஸ்

பிரேசில் நட்ஸ். உள்ள செலேனியம், ஃபைபர், பைடோ கெமிக்கல்ஸ் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. புற்று நோய் ஏற்படாமலும் தடுக்கின்றன.

பூண்டு

புற்று நோய்க்கு எதிராக செயல்புரியும் அல்லியம் எனும் வேதிப்பொருள் பூண்டில் இருக்கிறது. தினமும் காலையில் ஒரு பல் பூண்டு சாப்பிடுகிறீர்கள் என்றால் புற்று நோய் இல்லாத வாழ்க்கை வாழலாம்!

மாதுளை

மாதுளை பழத்தில் பாலிஃபினால் எனும் வேதிப்பொருள் இருப்பதால் அவை மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கின்றன. மேலும் மாதுளை பழத்தில் உடலுக்கு நன்மை தரும் பல குணநலன்கள் இருக்கின்றன.

இலையுடன் உள்ள காய்கறிகள்

கேல், கொல்லார்ட்ஸ், ஸ்பினாச் மற்றும் சுவிஸ் சார்ட் ஆகிய இலை உள்ள காய்கறிகள் கேன்சன் செல்களுக்கு எதிராக வீரியத்துடன் செயல்புரிபவை. இவற்றில் உள்ள ஃபைபர், விட்டமின் பி, பைட்டோ கெமிக்கல்ஸ், குளோரோபில் ஆகியவை புற்றுநோய் வராமல் தடுக்கின்றன.

சால்மோன்

சால்மோன் எனப்படும் காலா மீனில் ஒமோகா 3 எஸ், விட்டமின் பி 12 மற்றும் டி ஆகியவை இருப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கின்றன. விட்டமின் பி 12 புற்று நோய்க்கு எதிராக தீவிரத்துடன் செயல்புரிவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரக்கோலி

மார்பக புற்றுநோய், சிறுநீகர புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் என்று எல்லாத வித புற்றுநோய் வராமல் தடுக்கிறது. செல் வளர்ச்சியை பிரக்கோலி பல்வேறு வழிகளில் முறைப்படுத்தி கேன்சர் வராமல் காக்கிறது.

கிரீன் டி

ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு கப் கிரீன் டி குடித்து வந்தால் புற்று நோய் தடுக்கப்படுவது மட்டுமல்லாமல் உடலுக்கு பல்வேறு நலன்கள் உள்ளன.

மிளகாய்

சில்லி மற்றும் ஜலபெனோ பெப்பர்ஸ் கேன்சன் செல் வளர்வதை தடுக்கின்றன. பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாய் ஆகியவையும் மார்பக புற்றுநோய்க்கு எதிராக செயல்புரிகின்றன.

மஞ்சள்

மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உள்ள கர்கியூமின் எனும் வேதிப்பொருள் மார்பக புற்று நோய், நுரையீரல், ஸ்கின் புற்று நோய் ஆகியவை வராமல் தடுக்கின்றன. கேன்சன் ஏற்படுத்தும் செல்களுக்கு எதிராக தீவிரமாக செயல்புரிகின்றன.

SHARE