மாவை.சேனாதிராசா போராடி தமிழீழம் கண்டால் மகிழ்ச்சி! – கலைஞர் கருணாநிதி

273
மாவை.சேனாதிராசா போராடி தமிழீழம் கண்டால் மகிழ்ச்சி! – கலைஞர் கருணாநிதி குதூகளிக்கிறார். 
யாழ்.வலம்புரி ஆசிரியரிடம் செமயாக மொக்கை வாங்கும் மாவை.சேனாதிராசா
 
இலங்கை தனிச் சிங்கள நாடு என்றால், நாங்கள் சர்வதேசத்தின் ஆதரவுடன் தமிழீழம் அமைப்போம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா பாராளுமன்றத்தில் அண்மையில் சூளுரைத்திருந்தார்.
 
சிங்கள தேசம் என்று நீங்கள் கூறினால் நாங்கள் தமிழீழம் அமைப்போம் என்று மாவை கூறியிருப்பது குறித்து ஒரு பொதுவான அபிப்பிராயத்தை தமிழ் மக்களிடம் கேட்டால் மக்களின் பதில் என்னவாக இருக்கும் என்று ஒரு கற்பனை செய்து கொண்டோம். 
 
முதலில் தமிழ் அரசியல் தலைமையிடம் கேட்டுப்பார்ப்போம்…
 
சம்பந்தர்:
 
நான் படிச்சுப் படிச்சு சொன்னான் தமிழீழம் என்ற பேச்சை கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மறந்துவிட வேணும் எண்டு. 
 
ஆனால் பொறுத்த நேரத்தில் மாவை தமிழீழம் அமைப்போம் என்று சொல்லி விட்டார். இது அவரின் தனிப்பட்ட கருத்து. அவர் விரும்பினால் தமிழீழம் அமைக்கலாம். இதுபற்றி இப்போதைக்கு நாங்கள் கருத்து எதனையும் சொல்ல முடியாது. கூடி ஆராய்ந்துதான் முடிவு எடுக்க முடியும். 
 
கலைஞர் கருணாநிதி:
 
தமிழீழம் மலர்ந்தால் மிக்க மகிழ்ச்சி. அதுவும் மாவை சேனாதி போராடி தமிழீழம் கண்டால் என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
 
தமிழீழம் மலர்ந்தது என்ற மனமகிழ்வோடு மரணிப்பேன் வாழ்க தமிழ். வாழ்க மாவை.
 
சுரேஸ் பிரேமச்சந்திரன்:
 
அண்ணன் மாவை நடக்கக் கூடியதைக் கதைப்பது அவருக்கும் நல்லது. தமிழ் மக்களுக்கும் நல்லது.
 
அடுத்து பொதுமக்களிடம் கேட்டுப்பார்ப்போம்…
 
முன்னாள் போராளிகள்:
 
தமிழீழம் அமைக்க ஓடி வாங்க! ஓடிவாங்க! என்று நாம் கத்திய போது எட்டிப் பார்க்காதவர் இனி தமிழீழம் அமைக்கப் போகிறாராம். தமிழீழத்திற்கான பெரிய ஆயுதப் போராட்டத்தை உலகம் தோற்கடித்த போது, ஏன் என்று கேட்காதவர் இப்போது தமிழீழம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம். 
 
மாவீரரின் பெற்றோர்:
 
ஆ… கடவுளே! எங்கள் பிள்ளைகளைத் தொலைத்துப் போட்டு இப்ப அவர் தமிழீழம் காணப் போகிறாராம். வெளிநாட்டில இரு க்கிற அவற்ற பிள்ளைகளோ  இங்க வந்து ஆயுதம் ஏந்திப் போராடப் போகினம். எங்கட பிள்ளைகளை இழந்து நாங்கள் படும் வேதனை. முந்தியும் இப்படியான கோ­ங்கள் எழுப்பித்தானே எங்கட இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினவர்கள். 
 
வாழ வேண்டிய பிள்ளைகளை அழிச்சுப் போட்டு நாசமறுப்பார் பிறகும் தமிழீழம் என்று சொல்லு கினம். உவையளின் உசுப்பேத்தல ஆரும் நம்பிப் போடாதிங்க… 
 
வன்னியில் பாதிக்கப்பட்டவர்கள்:
 
கடவுளே…! கட வுளே… பிறகும் ஏதேனும் தேர்தல் வரப்போகுதோ… தமிழீழம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கினம்.
 
வன்னியில 18 தடவை இடப்பெயர்வு, முட்கம்பி வேலிக்குள்ள அடைப்பு, எல்லாத் துன்பங்களையும் இந்த மண்ணில அனுபவிச்சுப் போட்டம். 
 
இவர் இப்ப தமிழீழம் என்று சொல்லுகிறது சரியோ. கந்தறுத்த சர்வதேசத்தை நம்பித்தானே நாங்கள் எல்லாத்தையும் இழந்தம். இப்ப மாவை ஐயா கேட்டவுடன சர்வதேசம் வந்து தமிழீழத்தைப் பிரித்துக் கொடுக்குமோ. பேசுவதற்கு முதல் என்ன பேசுறம் என்பதை ஒருக்கால் சிந்தித்துப் பேசுங்கள். 
 
இப்படியாக அவர்களின் கருத்துகள் அமையலாம் என்பது கற்பனை மட்டுமே
SHARE