மீண்டும் ஒபாமாவை வம்பிழுத்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி

152

625-500-560-350-160-300-053-800-748-160-70-1

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை, உங்கள் வேலையில் நீங்கள் கவனம் செலுத்துங்கள் என கூறி வம்பிழுத்துள்ளார்.

அமெரிக்க அரசு குறிப்பிட்ட ஆயுதங்களை பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு விற்பனை செய்ய மறுத்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜனாதிபதி ரோட்ரிகோ, உங்கள் வேலையில் நீங்கள் கவனம் செலுத்துங்கள் என்று பொருள்பட திட்டியுள்ளார்.

மட்டுமின்றி, அமெரிக்கா தங்களுக்கு ஆயுதம் விற்பனை செய்யவில்லை என்றாலும் கவலை இல்லை, சீனா மற்றும் ரஷ்யா அந்த ஆயுதங்களை தங்களுக்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா மேலும் மூக்கை நுழைக்கும் என்றால், அந்த நாட்டுடனான உறவை முறித்துக்கொள்ளவும் தான் தயங்குவதில்லை என்று ரோட்ரிகோ வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தங்கள் நட்டு மக்களை ஆரோக்கியத்துடன் வைத்திருப்பது ஜனநாயக கடமை என்று குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைப்பதன் காரணம் என்னவென்றும் அவர் வினவினார்.

சீனாவை பொறுத்தவரை, ஒருமுறை வந்து ஒப்பந்தமிட்டு செல்லுங்கள், உங்கள் நாட்டிற்கே ஆயுதங்களை கொண்டுவந்து தருகிறோம் என கூறுகின்றனர்.

உண்மையில் போதை மருந்து கடத்தல் மற்றும் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்க முயற்சி மேற்கொண்டுவரும் பிலிப்பைன்ஸ் தேசத்துக்கு அமெரிக்கா ஆதரவளிக்க வேண்டும். ஆனால் எங்களுக்கு உதவுவதில் அமெரிக்கா முனைப்பு காட்டவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

SHARE