முப்பது வருடங்களின் பின்னர் இந்திய போர்க் கப்பல் இலங்கையில்

229

 

முப்பது வருடங்களின் பின்னர் இந்தியக் கடற்படையின் விமானம் தாங்கி போர்க் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வரவுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

‘விக்கிரமாதித்யா என்ற விமானம் தங்கி போர்கப்பல் நாளை மறுதினம் கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது. இதற்கு அமோக வரவேற்பளிக்க கடற்படை தயாராகி வருகின்றது.

ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட இக் கப்பல் 44,500 தொன் எடை கொண்டது. இதில்  30 மிக்-29 போர் விமானங்களும், ஆறு காமோவ் உலங்கு வானூர்திகளும் தரித்து நிற்கும் வசதிகள் உள்ளன. 110 அதிகாரிகளும், 1500 மாலுமிகளும் இதில் பணியாற்றுகின்றனர்.

இக் கப்பல் 2014ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

கொழும்புத் துறைமுகத்தில் தற்போது தரித்து நிற்கும், சீனாவின் மூன்று போர்க்கப்பல்கள் எதிர்வரும் வியாழக்கிழமை புறப்பட்டுச் செல்லவுள்ள நிலையிலேயே, இந்தியாவின் மிகப்பெரிய போர்கப்பலான விக்கிரமாதித்யா கொழும்பு வரவுள்ளது.

இது இந்திய- இலங்கை பாதுகாப்பு உறவுகளில் முக்கிய திருப்பம் என்று கூறப்படுகிறது. எவ்வாறெனினும் இறுதியாக அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் ஒன்று 1985ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE