முல்லைத்தீவில் தொடர்கிறது சட்டவிரோதக் குடியேற்றம்: பார்கச் சென்ற மக்களுக்கு அச்சுறுத்தல்

246

முல்லைத்தீவு பகுதியில் சட்டவிரோதமாக குடியேற்றம் நடைபெற்று வரும் நிலையில் அதனை பார்வையிடச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் குடியேற்றவாசிகளாால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களே இவ்வாறு அச்சுறுப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவுப் பகுதியில் காடுகளை அழித்து அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் குடியேற்றம் இடம்பெற்றுவருகின்றது. இங்கு குடியேற்றமும் காடழிப்பும் சட்ட வரம்புகளை மீறி நடைபெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கொத்தம்பியா கும்பம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தேக்குமரக்காட்டினை அழித்து குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரச அதிபருக்குத் தெரியாமலேயே இது நடைபெறுகிறது.

குறித்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் டாக்டர் சிவமோகன் ஆகியோர் சென்றுள்ளனர். அத்துடன் வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரனும் அங்கு சென்று சென்றுள்ளார். குடியேற்றவாசிகளின் அச்சுறுத்தலையடுத்து மெய்பாதுகாவலர்கள் மக்கள் பிரதிநிதிகளை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

SHARE