முல்லைத்தீவில் 24 கிராம சேவர் பிரிவுகளுக்கு நிரந்தர கிராமசேவகர்களில்லை: குளோபல் தமிழ் செய்தியாளர்

236
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு முதலிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் 24 கிராம சேகவர் பிரிவுகளுக்கு நிரந்தர கிராம சேவகர்களில்லை என்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது அயல் கிராமங்களில் உள்ள கிராம சேவகர்களே பதில் கடமையாற்றி வருவதாக தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் தமது தேவைகளை நிவர்த்தி செய்வற்கு அயல் கிராம சேவகர் அலுவலகங்களிற்கும் அவர்களது வீடுகளுக்கும் அலைவதாக கூறுகின்றனர்.
மீள்குடியேற்றத்தின் பின்னர் துணுக்கார் பிரதேசத்தில் 20 கிராம சேகவர் பிரிவுகள் உள்ள நிலையில் ஏழு கிராம சேவகர் பிரிவுகளுக்கு நிரந்தர கிராமசேவகர் இல்லாமல் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
மாந்தை கிழக்கில் 15 கிராம சேகவர் பிரிவுகளில் ஏழு கிராம சேவகர்கள் நியமிக்கப்படவி்லலை என்றும் ஒட்டு சுட்டான் பிரதேசத்தில் 27 கிராம சேவகர் பிரிவுகளிர் பத்து கிராம சேவகர்கள் நிரந்தரமாக நியமிக்கவில்லை என்றும் மக்கள் கூறுகின்றனர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறியுள்ள மக்கள் தமது வீட்டுத்திட்ட தேவைகள், நலத்திட்டங்கள், மீள் எழுச்சி தொடர்பிலான உதவிகள் போன்றவற்கு கிராம சேவகரின் உறுதிப்படுத்தல்கள் தேவைப்படுவதாக கூறுகின்றனர்.
அவைகளை நிவர்த்தி செய்து கொள்வதில் தாம் பெரும் இடர்பாடுகளை அனுபவிப்பதுடன் இதற்காக அயல் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள கிராம சேவகர் அலுவலங்களுக்கும் அவர்களின் வீடுகளுக்கும் அலைவதாக கூறுகின்றனர்.
விரைவில் தமது கிராமங்களுக்கு நிரந்தர கிராம சேவகர்களை நியமிக்குமாறும் போரால் பாதிக்கப்பட்ட தமது மீள் வாழ்விற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க அது அவசியம் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
SHARE