முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோர் பேராராடடத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வைத்திய கலாநிதி MPசிவமோகன்-விடுதலைவேண்டி தொடர்போராட்டங்களை முன்நெடுப்போம்

167

 

முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோர் பேராராடடத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வைத்திய கலாநிதி MPசிவமோகன்-விடுதலைவேண்டி தொடர்போராட்டங்களை முன்நெடுப்போம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாவட்ட செயலகத்துக்கு  முன்பாக நேற்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோருக்கான மனுக்களையும் அவர்கள் கையளித்தனர்.
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நேற்றுப் பூரண ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“போர் நடைபெற்ற காலத்திலும் போரின் இறுதிக்கட்டத்திலும் படையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களும், படையினரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களும் எங்கே இருக்கின்றார்கள் என்பது தொடர்பாக எந்தவிதமான உறுதியான தகவல்களும் எமக்குக் கிடைக்கவில்லை. இதற்குப் பொறுப்பானவர்களும் பதில் சொல்வதாக இல்லை. இனியும் காலத்தைத் தாமதிக்காது எங்கள் உறவுகளுக்கு விரைந்த தீர்வைப் பெற்றுத்தாருங்கள்” என்று வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கான மனுக்களை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஊடாகவும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்குரிய மனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசாவிடமும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குரிய மனுவை வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனிடமும் அவர்கள் வழங்கிவைத்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், சார்ள்ஸ் நிர்மலநாதன், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
SHARE