முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் பசப்பு வார்த்­தை­களை நம்பி இனியும் இருப்­பார்­க­ளாயின் தமது எதிர்­கால சந்­தி­யி­ன­ருக்கு செய்­கின்ற மிகப்பெரிய வர­லாற்றுத் துரோ­க­மா­கவே இருக்கும்.

191

 

இலங்கை அர­சாங்கம் அர­சியல் தீர்­வினை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. இலங்­கையின் அர­சியல் யாப்பில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக சிறு­பான்­மை­யினர் விளங்­கு­வ­தனை இல்­லாமல் செய்­வ­தற்­கான முன் ஆயத்­தங்கள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.

இதற்கு ஏற்ப சிறு­பான்மை கட்­சி­களின் தலை­வர்­களை ஆளுந் தரப்­பினர் தயார்­ப­டுத்தி வைத்­துள்­ளார்கள். ஆளுந் தரப்­பி­னரின் இந்த செயற் திட்­டத்­தினால் அதிகம் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­வர்­க­ளாக முஸ்லிம் சமூகம் இருக்கப் போகின்­றது.

இதனை முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் நட­வ­டிக்­கை­களின் மூல­மா­கவும், தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பி­னரின் கருத்­துக்­களின் மூல­மா­கவும் புரிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. இத்­த­ரு­ணத்தில் முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களும், பொது மக்­களும் விழித்துக் கொள்ள வேண்டும்.
இல்­லா­து­விடின் முஸ்­லிம்கள் தமது விகி­தா­சா­ரத்­திற்கு குறை­வான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் அர­சியல் பல­மற்­ற­தொரு சமூ­க­மாக வாழ வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலைக்குள் தள்­ளப்­ப­டு­வ­தனை தவிர்க்க முடி­யாது. முஸ்­லிம்கள் இந்த ஆபத்தை அலட்­சியம் செய்துகொள்ள முடி­யாது.

கடந்த காலங்­களைப் போன்று முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் பசப்பு வார்த்­தை­களை நம்பி இனியும் இருப்­பார்­க­ளாயின் தமது எதிர்­கால சந்­தி­யி­ன­ருக்கு செய்­கின்ற மிகப்பெரிய வர­லாற்றுத் துரோ­க­மா­கவே இருக்கும்.

1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜய­வர்த்­த­ன­வினால் கொண்டு வரப்­பட்ட அர­சியல் யாப்பில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி அதி­லுள்ள தேர்தல் முறை­யையும், நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­யையும் ஒழித்து மாற்று திட்­டங்­களை முன் வைக்­க­வுள்­ளார்கள்.

இதற்கு தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு பூரண சம்­மதம் தெரி­வித்­துள்­ளது. அக்­கட்சி தமி­ழர்­க­ளுக்கு எத்­த­கைய தீர்வு வேண்­டு­மென்று அறு­தி­யாக கூறி­யுள்­ள­துடன், தமது யோசனைத் திட்­டத்­தையும் முன் வைத்­துள்­ளது. முஸ்லிம் காங்­கி­ரஸும் அர­சியல் மாற்­றத்­திற்கு சம்­மதம் தெரி­வித்­துள்­ளது.

ஆனால், இக்­கட்சி இன்னும் முஸ்­லிம்கள் சார்­பான அர­சியல் தீர்வு திட்­டத்தை முன் வைக்­க­வில்லை. இனப் பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வுக்கு தாங்கள் விட்டுக் கொடுப்­புடன் செயற்­ப­டு­வ­தற்கு தயார் என்று மாத்­திரம் அடிக்­கடி சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றது. ஏனைய முஸ்லிம் கட்­சி­களும் அர­சியல் யாப்பு மாற்­றத்­திற்கு ஆத­ர­வா­கவே உள்­ளது.

1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்ட விகி­தா­சார தேர்தல் முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடி­யா­தென்று அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும், தேசிய காங்­கி­ரஸும் தெரி­வித்­துள்­ளது. இக்­கட்­சிகள் வடக்கும், கிழக்கும் பிரிந்­தி­ருக்க வேண்­டு­மென்றும் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால், முஸ்லிம் காங்­கிரஸ் விகி­தா­சார தேர்தல் முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சம்­மதம் தெரி­வித்­துள்­ளது.

வடக்கும், கிழக்கும் இணைய வேண்­டுமா அல்­லது பிரிய வேண்­டுமா என்­பதில் தெளி­வற்ற போக்கை கடைப்­பி­டித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. இக்­கட்சி அர­சியல் யாப்பு மாற்­றத்தில் கூட தமது வழ­மை­யான நழுவல் போக்­கையே கடைப்­பி­டித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. முஸ்லிம் சமூ­கத்தின் அர­சி­ய­லுக்கு தலைமை வகித்துக் கொண்­டி­ருக்கும் அர­சியல் கட்­சி­யாக உள்ள முஸ்லிம் காங்­கிரஸ் அர­சியல் யாப்பு மாற்­றத்­திலும் நழுவல் போக்கை கடைப்­பி­டித்துக் கொண்­டி­ருப்­பது ஏற்றுக் கொள்ளக் கூய­தல்ல.

இதே வேளை, தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் வடக்கும், கிழக்கும் இணைக்­கப்­படல் வேண்டும். இதற்கு முஸ்­லிம்­களும் ஆத­ரவு தர வேண்டும். இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்­லிம்­களின் அபி­லா­சைகள் நிறை­வேற்­றப்­படும். வடக்கு, கிழக்கு இணைப்பு என்­பது ஒரு முத­ல­மைச்­ச­ருடன் சம்­பந்­தப்­பட்ட விட­ய­மல்ல என்று  தெரி­வித்­துள்ளார். இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்­புக்கள் ஏற்­ப­டா­தென்று தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு அடிக்­கடி தெரி­வித்துக் கொண்­டி­ருப்­பதன் மூலம் அக்­கட்­சிக்கு புதிய அர­சியல் யாப்பில் உள்­ள­டக்­கப்­ப­ட­வுள்ள விட­ய­தா­னங்கள் தெளி­வாகத் தெரியும் என்று கருத முடியும்.

புதிய அர­சியல் யாப்பில் எவ்­வா­றான அதி­கா­ரங்கள் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளன என்று இன்னும் பகி­ரங்­க­மாக தெரி­யாது. புதிய அர­சியல் யாப்பு இவ்­வா­றுதான் அமை­ய­வுள்­ள­தென்று அர­சாங்கம் கூட தெரி­விக்­க­வில்லை. இந்­நி­லையில் வடக்கும், கிழக்கும் இணையும் போது முஸ்­லிம்­களின் அபி­லா­சை­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டாது என்று எவ்­வாறு இரா.சம்­பந்­தனால் உறுதி கூற முடியும்?

இணைந்த வடக்கு, கிழக்கை வேண்­டி­யுள்ள தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு முன் வைத்­துள்ள அர­சியல் தீர்வு விட­யத்தில் முஸ்­லிம்­களின் அபி­லா­சைகள் குறித்து முன் வைத்­துள்ள யோச­னைகள் யாவை என்று தெரி­விக்­காத நிலை­யிலும், முஸ்லிம் காங்­கிரஸ் உள்­ளிட்ட முஸ்லிம் கட்­சிகள் எந்­த­வொரு அர­சியல் தீர்வு யோச­னை­யையும்  முன் வைக்­காது இருக்­கின்ற நிலை­யிலும் முஸ்­லிம்­க­ளினால் இணைந்த வடக்கு, கிழக்­கிற்கு மாத்­தி­ர­மன்றி புதிய அர­சியல் யாப்­பையும் ஏற்றுக் கொள்ள முடி­யாது.

வடக்கும், கிழக்கும் இணை­வ­தாக இருந்­தாலும், இவ்­விரு மாகா­ணங்­களும் தனித்­த­னி­யாக செயற்­ப­டு­வ­தாக இருந்­தாலும், புதிய அர­சியல் யாப்பு என்று ஒன்று வர வேண்­டு­மாயின் அதில் என்ன இருக்­கின்­ற­தென்று தெரிந்து கொள்­ளாமல் ஆத­ரிக்க முடி­யாது. எது­வுமே தெரி­யாத நிலையில் முஸ்லிம் கட்­சிகள் குறிப்­பாக முஸ்லிம் காங்­கிரஸ் புதிய அர­சியல் யாப்­புக்கு ஆத­ரவு அளிக்­கு­மாயின் அச்­செயல் அடி­மைத்­ த­னத்­திற்கு சம­மாகும்.

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு இணைந்த வடக்கு, கிழக்கு வேண்­டு­மென்று பகி­ரங்­க­மாக உரத்த குரலில் கேட்டுக் கொண்­டி­ருக்­கையில் முஸ்லிம் காங்­கி­ரஸும் ஏனைய முஸ்லிம் கட்­சி­களும் மௌன­மாக அர­சாங்கம் தரு­வ­தையோ அல்­லது தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் அதி­உச்ச வேண்­டு­கோள்­களை நிறை­வேற்றும் வகையிலோ அமையும் புதிய அர­சியல் யாப்பை ஏற்றுக் கொள்ள முடி­யாது.

தற்­போது நடை­மு­றையில் உள்ள 1978 ஆம் ஆண்­டைய அர­சியல் யாப்­புக்கு மாற்­ற­மாக முஸ்லிம் கட்­சிகள் புதிய அர­சியல் யாப்­புக்கு ஆத­ரவு தெரி­விக்க வேண்­டு­மாயின் புதிய அர­சியல் யாப்பு மூல­மாக முஸ்­லிம்கள் இன்று பெற்றுக் கொண்­டி­ருக்கும் பயன்­களை விடவும் கூடுதல் பயன்கள் கிடைக்க வேண்டும். அதனை அறிந்து கொள்ள வேண்­டு­மாயின் புதிய அர­சியல் யாப்பில் உள்­ள­வைகள் தெரிய வேண்டும்.

1978 ஆம் ஆண்டின் பின்­னர்தான் 20 இற்கும் குறை­யாத முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார்கள். அது மாத்­தி­ர­மின்றி நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வதில் முஸ்­லிம்­களின் வாக்­குகள் மிகப் பெரிய செல்­வாக்கு செலுத்தி வந்­துள்­ளன.

இதனால், முஸ்­லிம்­களை பகைத்துக் கொண்டு எந்­த­வொரு ஜனா­தி­ப­தி­யாலும் செயற்­பட முடி­யாது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட பௌத்த இன­வா­தி­களின் அடக்கு முறை­களை கண்டு கொள்­ளா­தி­ருந்­த­மையால் அவர் ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்தார். அவ­ருக்கு எதி­ராக முஸ்­லிம்கள் வாக்­க­ளித்து தமது வாக்குப் பலத்தை காட்­டி­னார்கள்.

இன்று மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ தான் முஸ்­லிம்­களின் விட­யங்­களில் பிழை­யாக வழி நடத்­தப்­பட்­ட­தாக வருத்தம் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்றார். முஸ்­லிம்­களின் ஆத­ரவை மீண்டும் கோரு­கின்றார். இந்­நிலை புதிய அர­சியல் யாப்பில் ஏற்­ப­டு­வ­தற்கு எந்த அறி­கு­றி­க­ளு­மில்லை.

ஆகவே, முஸ்­லிம்­களை பொறுத்த வரை 1978 ஆம் ஆண்டை விடவும் சிறப்­பா­ன­தொரு அர­சியல் யாப்பு வருமா என்­பது சந்­தே­க­மாகும். இதனை விடவும் சிறப்­பா­ன­தொரு அர­சியல் யாப்­பையே முஸ்­லிம்­க­ளினால் ஆத­ரிக்க முடியும். ஆனால், இன்று முஸ்லிம் கட்­சிகள் புதிய அர­சியல் யாப்பில் முஸ்­லிம்­களின் நலன்­களை கருத்திற் கொள்­ளாது, அர­சாங்­கத்தின் திட்­டத்­திற்கு ஆத­ரவு அளித்துக் கொண்­டி­ருப்­பது முஸ்­லிம்­களின் எதிர்­கா­லத்தை குழி­தோண்டிப் புதைப்­ப­தற்கு சம­மாகும்.

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்­லிம்­களின் அபி­லா­சை­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டா­தென்று தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்றார்.

முஸ்­லிம்­க­ளையும் அர­வ­ணைத்துக் கொண்டு செல்ல வேண்­டு­மென்ற எண்ணங் கொண்ட தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பும் அக்­கட்­சி­யுடன் நெருக்­க­மான உற­வ­களை பேணிக் கொண்­டி­ருக்கும்  முஸ்லிம் காங்­கி­ரஸும் இணைந்து புதிய அர­சியல் யாப்பில் சிறு­பான்­மை­யி­னரின் அபி­லா­சை­களை உள்­ள­டக்­கிய  ஆலோ­ச­னை­களை முன் வைக்க முடி­ய­வில்லை. முஸ்லிம் கட்­சி­க­ளுக்கும், முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கும் தெரி­யாமல் தமது அர­சியல் ஆலோ­ச­னை­களை அர­சாங்­கத்­தி­டமும், சர்­வ­தே­சத்­தி­டமும் முன் வைத்­துள்ள தமிழ்த் தேசிய கூட்­டமைப்பு தமது கோரிக்­கை­க­ளுக்கு முஸ்­லிம்­களின் ஆத­ர­வையும் கோரிக் கொண்­டி­ருப்­பதும், அதற்கு முஸ்லிம் காங்­கிரஸ் மௌன­மாக இருப்­பதும் பலத்த சந்­தே­கங்­களை தோற்­று­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றன.

புதிய அர­சியல் யாப்பை வேண்டி நிற்கும் முஸ்லிம் கட்­சி­க­ளிடம் முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சாளர் பசீர் சேகு­தாவூத் சில கேள்­வி­களை கேட்­டுள்ளார்.

அதா­வது, ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்­கின்ற அந்தஸ்த்து இருக்க வேண்­டுமா, வேண்­டாமா என்று சொல்ல வேண்டும். மாவட்ட முறையில் 05 வீத வெட்டுப் புள்­ளியின் அடிப்­டையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய இந்த முறை இருக்க வேண்­டுமா, தேவை­யில்­லையா என்று சொல்ல வேண்டும். 1978 ஆம் ஆண்டின் பின்னர் முஸ்­லிம்கள் பேரம் பேசும் சக்­தி­யாக உள்­ளார்கள். இந்த சக்தி இருக்க வேண்­டுமா, இல்­லையா என்று சொல்ல வேண்டும்.

புதிய யாப்பு மாற்­றத்தின் பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு இந்த அர­சியல் சக்­திகள் இருக்­குமா என்று சொல்ல வேண்டும்.

கிழக்கு முஸ்­லிம்­களின் அபி­லா­சை­யாக உள்ள எங்­களை நாங்­களே ஆளும் தனி அலகு இருக்­குமா இல்­லையா என்று சொல்ல வேண்டும். ஒளித்து நாட­க­மாடக் கூடாது.

முஸ்லிம் காங்­கிரஸ், அகில மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ் எந்தக் கட்­சி­யாக இருந்­தாலும் எங்­க­ளுக்கு யாப்பு மாற்றம் தேவை­யில்லை என்று ஒரு வரிதான் எழுத வேண்டும். நமக்கு எல்­லாமே 1978 ஆம் ஆண்டில் இருக்­கின்­றது. வேறு எந்த யாப்பும் முஸ்­லிம்­களுக்கு இது போன்று இருக்­காது. அதுதான் இணக்க அர­சியல் யாப்பை தந்­தது. அதுதான் முஸ்­லிம்­களை பேரம் பேசும் சக்­தி­யாக மாற்­றி­யது. அதுதான் 17 வரு­டங்கள் ஆட்சி செய்த ஐ.தே.க.வின் ஆட்­சியை மாற்­றி­யது எனக் கேட்­டுள்ளார். இவரின் இக்­கேள்­வி­க­ளுக்­கு­ரிய நியா­ய­மான பதில் மூலம்தான் புதிய அர­சியல் யாப்பை முஸ்­லிம்கள் ஆத­ரிக்க வேண்­டுமா என்று தீர்­மா­னிக்க வேண்டும்.

முஸ்லிம் கட்­சிகள் ஒரு தனி நபரின் அபி­லா­சை­க­ளுக்கும், சிலரின் பதவி மோகங்­களை மையப்­ப­டுத்­தி­யுமே முடி­வு­களை எடுத்துச் செயற்­பட்டு வந்­துள்­ளன. அவ்வா­றுதான் புதிய அர­சியல் யாப்பு விட­யத்­திலும் முஸ்லிம் கட்­சி­களின் செயற்­பா­டுகள் அமை­ய­வுள்­ளன. தாங்கள் வெற்றி பெறு­வ­தற்­கு­ரிய தேர்தல் தொகு­தியை பெற்றுக் கொண்டு முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் வீதியில் நிறுத்­து­வ­தற்கு துணை போய்க் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இஸ்லாம் மார்க்கம் கூட எழுத்து மூலம் உடன்­ப­டிக்­கை­களை வைத்துக்  கொள்­ளு­மாறு சொல்லிக் கொண்­டி­ருக்­கையில் குர்­ஆன், ஹதீஸ் என்று கட்­சியின் யாப்பை வைத்துக் கொண்டு புதிய அர­சியல் யாப்பு எதனைத் தரப்­போ­கின்­ற­தென்று தெரி­யாமல் அல்­லது தெரிந்தும் மக்­க­ளுக்கு அதனை தெரி­விக்­காமல் தங்­களின் தனிப்­பட்ட அபி­லா­சை­க­ளுக்­காக சமூ­கத்தின் எதிர்கால சந்ததியினரை சந்தியில் நிறுத்த முனைந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவ்­வாறு முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தனை முஸ்லிம் சிவில் அமைப்­புக்கள் வெளிப்­ப­டையாக சுட்டிக் காட்ட வேண்டும். முஸ்­லிம்­களின் அபி­லா­சைகள் இவைதான் என்று அடை­யா­ளப்­ப­டுத்தி அவற்றை அடைந்து கொள்­வ­தற்கு அழுத்­தங்­களை கொடுக்க வேண்டும். முஸ்­லிம்­களின் எதிர்­கா­லத்தை முஸ்லிம் கட்­சி­க­ளி­டமோ, அர­சாங்­கத்­தி­டமோ, தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பி­டமோ ஒப்­ப­டைக்க முடி­யாது.

எங்­களின் தலை­வி­தியை நாங்­கள்தான் தீர்­மா­னிக்க வேண்டும். இதனை ஒளித்து வைத்து நாட­க­மாடி, நல்­லது நடக்கும் என்று சொல்லிக் கொண்டு, விட்டுக் கொடுப்­புக்கு தயார் என்று எல்­லோ­ரையும் ஏமாற்றிக் கொண்டு, அர­சாங்­கத்தின் அமைச்சர் பத­வி­க­ளுக்கு வாய்­ பி­ளந்து கொண்டு, கொந்­த­ராத்­துக்­க­ளுக்­காக சேவகம் செய்து கொண்டு, தமது கடந்த கால குற்­றங்­களை மறைப்­ப­தற்­காக எல்­லா­வற்­றிற்கும் தலையசைத்துக் கொண்டு செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் முஸ்லிம் கட்­சி­க­ளி­டமும், அவற்றின் தலை­வர்கள், பாரா­ளு­மன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களிடம் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியாது.

SHARE