மெர்சல் இத்தனை கோடி வரை நஷ்டமா? அதிர்ச்சி தகவல்

169

மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த வருடம் வெளிவந்து வசூல் வேட்டை நடத்திய படம். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

விநியோகஸ்தர்களுக்கு மெர்சல் அளவிற்கு பெரிய லாபம் கொடுத்த படம் வேறு ஏதும் சமீபத்தில் இல்லை என்று கூறப்படுகின்றது.

ஆனால், இப்படம் தயாரிப்பாளர்களுக்கு லாபமா என்றால் கேள்விக்குறி தான், நாம் முன்பே சொன்னது போல் ரூ 90 கோடிக்கு எடுக்க வேண்டிய படத்தை அட்லீ ரூ 130 கோடிகளுக்கு மேல் கொண்டு சென்று விட்டதாக பல தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இதன் மூலம் எப்படியும் தயாரிப்பாளருக்கு ரூ 15லிருந்து 20 கோடி வரை மெர்சல் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கும் என தெரிகின்றது.

ஆனால், தேனாண்டாள் மெர்சல் எங்களுக்கு மெகா ஹிட் என்று கூறிவிட்டனர், அப்படியிருக்க தொடர்ந்து இப்படி மெர்சல் நஷ்டம் தகவல் வருவது பலருக்கும் பல விதமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE