மைத்திரியின் செயற்பாடு எதனை நோக்கி நகர்கிறது! வெடிக்கும் சர்ச்சைகள்

167

downloadநல்லாட்சியின் நாயகன், எளிமையின் சிரகம் என வர்ணிக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அவர் ஊழல், மோசடிகளை ஒழிக்கும் நடவடிக்கையிலிருந்து விலகி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதையிலேயே பயணிப்பதாக சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் பல்வேறு குற்றம் சுமத்தப்பட்டவர்களை தன்னுடன் இணைத்து கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கும் நடவடிக்கையை ஜனாதிபதி மைத்திரி முன்னெடுத்து வருகிறார். இது பல்வேறு சர்ச்சை நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது கடுமையான ஊழல்களை மேற்கொண்ட நபராக குற்றம் சுமத்தப்பட்டிருந்த முன்னாள் உறுப்பினர் ஒருவரை, மீண்டும் சுதந்திர கட்சியில் இணைத்துக்கொண்டு, ஜனாதிபதியுடன் அவர் ஒரே மேடையில் ஏறி சுதந்திர கட்சியின் மே தினம் குறித்த பேசுவது, மைத்திரியின் செல்வாக்கிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஊழல் மோசடி ஒழிப்பது தொடர்பில் வாக்குறுதியளித்து அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மோசடிக்காரர்களை பாதுகாப்பதாக இதன் ஊடாக சந்தேகம் எழுந்துள்ளதென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தனக்கு ஆதரவு வழங்கிய புதிய தலைமுறை குழுவினர் மீது தாக்குதல் மேற்கொண்ட கமல் இந்திக்க என்பவருக்கு ஹிரியா தொகுதியின் சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பதவி ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளமைக்கு, பலரும் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

தற்போது வரையில் ஜனாதிபதி மைத்திரி நாட்டிற்கு பதிலாக சுதந்திர கட்சியை கட்டியெழுப்புவதற்கே முதலிடம் வழங்குவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாகாண சபை உறுப்பினர் புதிய தலைமுறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வேலைத்திடத்திற்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தின் பிரதானியாக செயற்பட்டுள்ளதாக, புதிய தலைமுறை குழுவினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது புதிய தலைமுறை அமைப்பை சேர்ந்த கலைஞர்கள் உட்பட பலரினால் ஹிரியால பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேலைத்திட்டத்திற்கு சிலரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த தாக்குதலுக்கு கமல் இந்திக்க என்ற உறுப்பினர் தலைமை தாங்கியதாக தெரிவிக்கப்படும் அவ்வாறான நபருக்கு ஜனாதிபதியினால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர் பதவி வழங்குவதற்கு தங்கள் கண்டனத்தை வெளியிடுவதாக புதிய தலைமுறை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

SHARE