யாழ். மாவட்ட செயலகத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ந.வேதநாயகம் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

379

 

யாழ். மாவட்ட செயலகத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ந.வேதநாயகம் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.murikandy05

இந்த நிலையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சுந்தரம் அருமைநாயகம் கிளிநொச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதுடன் முல்லைத்தீவில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய ந.வேதநாயகம் யாழ். மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக பதவியேற்றுள்ளார்.

மேலும், முல்லைத்தீவுக்கான புதிய அரசாங்க அதிபராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய ரூபாவதி கேதீஸ்வரன் கடமையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் அரசாங்க அதிபராக கடமையாற்றியவர்களை உள்ளக இடமாற்றம் அடிப்படையில் இடமாற்றம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE