யூத இனப்படுகொலையை உலகுக்கு காட்டிய பிரபல இயக்குநர் மரணம்!

126
Image

ஒன்பது மணி நேர ஆவணப்படமாகிய Shoah என்னும் படத்தின் மூலம் நாஸிக்கள் புரிந்த கொடூர யூத இனப்படுகொலையை உலகுக்கு காட்டிய பிரான்சை சேர்ந்த பிரபல இயக்குநர் Claude Lanzmann தனது 92ஆவது வயதில் மரணமடைந்தார்.

அவருக்கு பிரான்ஸ் தனது அஞ்சலியை செலுத்தி வருகிறது. இஸ்ரேல் இல்லாவிட்டால் நான் நிர்வாணமாகவும் பாதுகாப்பற்றவனாகவும் உணர்கிறேன் என்று கூறுமளவுக்கு இஸ்ரேலை நேசித்த Claude Lanzmann எடுத்த Israel என்னும் திரைப்படத்தால் கவரப்பட்ட இஸ்ரேல் அதிகாரிகள், யூத இனப்படுகொலையைப் பற்றி ஒரு திரைப்படம் எடுக்கும்படி அவரை கேட்டுக் கொண்டார்கள்.

அதற்கு அவர்கள் சில நிபந்தனைகளும் விதித்தார்கள், ஒன்று அந்த திரைப்படம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஓடக்கூடாது, 18 மாதங்களுக்குள் அதை எடுத்து முடித்து விட வேண்டும்.

நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்ட Lanzmann திரைப்படத்தை எடுக்க ஆரம்பித்தார்.

எடுத்தார், எடுத்தார் ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல, 12 ஆண்டுகள் ஆயிற்று அவருக்கு அந்த படத்தை முடிக்க.

ஒரு யூதரான தனக்கு நாஸிக்களால் ஆபத்து என்பதை அறிந்திருந்தும் தனது உயிரைப் பணயம் வைத்து அவர் அந்த படத்தை எடுத்தார்.

அதில் முக்கியமான சம்பவம் ஒன்று, சிறு அறைகளுக்குள் திணிக்கப்பட்ட யூதர்கள், விஷ வாயு செலுத்தப்பட்டு கொல்லப்படுவதை ஒளித்து வைக்கப்பட்ட கெமரா மூலம் படம் பிடித்ததாகும்.

350 மணி நேரம் ஓடும் அந்த திரைப்படத்தை எடிட் செய்ய மட்டும் அவருக்கு ஐந்து ஆண்டுகள் பிடித்தது.

உலகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்த அந்த மனதை உடைக்கும் திரைப்படத்தை எடுத்த Lanzmannக்கு பிரான்ஸ் தனது அஞ்சலியை செலுத்தி வருகிறது.

SHARE