ரியோ ஒலிம்பிக் கிராமத்தின் ‘பலே’ ஏற்பாடுகள்

185

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கவுள்ள ஒலிம்பிக் திருவிழா ஆகஸ்ட் 5ம் திகதி தொடங்கி 21ம் திகதி வரை நடைபெறவுள்ளன.

ரியோவில் வீரர், வீராங்கனைகளும் தங்கும் ஒலிம்பிக் கிராமமும் கூட தயாராகி விட்டது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்து விட்டன. ஒலிம்பிக் கிராமத்திலும் தற்போது கடைசிக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன.

இந்த ஒலிம்பிக் கிராமத்தில் மொத்தம் 31 பிளாக்குகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு 18,000 பேரை தங்க வைக்க முடியும். பசுமை நிறைந்ததாக இவை அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு ஒரு மிகப் பெரிய ஹொட்டலையும் கட்டியுள்ளனர். 5 ஏர்பஸ் ஏ 380 விமானங்களை நிறுத்தக் கூடிய அளவுக்கு இந்த ஹோட்டல் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

இங்கு தினசரி 210 டன் உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்படவுள்ளது. ஒரே நேரத்தில் 7,000 பேர் அமர்ந்து சாப்பிடக் கூடிய அளவுக்கு இருக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், பல்வேறு பணிகளைப் பார்த்துக் கொள்வதற்காக 13,000 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கிராமத்திலேயே தங்கி வீரர் வீராங்கனைகளுக்கு உதவ உள்ளனர்.

அதேபோல் மொத்தம் 3604 வீடுகளும் இங்கு உள்ளன. 2, 3 மற்றும் 4 படுக்கை வசதி கொண்ட இந்த வீடுகளில் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஜிகா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால், கொசுக் கடியிலிருந்து வீரர்கள், வீராங்கனைகளைக் காக்க சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாம்.

பட்ஜெட் நெருக்கடி காரணமாக ஒவ்வொரு அறையிலும் டி.வி வைக்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டனர். இதற்கு பதிலாக ஒவ்வொரு நாட்டு அணிக்கும் தனித் தனியாக ஸ்கிரீன் வைத்துள்ளனராம்.

மேலும், 2 மீட்டர் நீளமுடைய 19,000 படுக்கைகள் வீரர்கள், வீராங்கனைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. போட்டி முடிவடைந்ததும் இங்குள்ள வீடுகளை விற்று விடுவார்கள்.

இந்த ஏற்பாட்டில் ஒரு விடயம் பற்றி தான் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது ஒலிம்பிக் கிராமத்தில் கிட்டத்தட்ட 45,000 ஆணுறைகள் வீரர்கள், வீராங்கனைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்படவுள்ளதாம்.

எந்த நேரம் போய்க் கேட்டாலும் ஆணுறைகளைக் கொடுக்கும் அளவுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதாம். இது தான் முக்கியப் பரபரப்பாக மாறியுள்ளது.

625.500.560.350.160.300.053.800.748.160.70 (3)

SHARE