வற் வரி காரணமாக வாகனங்களின் விலைகள் உயர்வடையும் – இறக்குமதியாளர்கள்

219
வற் வரி காரணமாக வாகனங்களின் விலைகள் உயர்வடையும் - இறக்குமதியாளர்கள்

வற் வரி அதிகரிப்பின் காரணமாக வாகனங்களின் விலைகள் உயர்வடையும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் பாரியளவில் உயர்வடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் மஹிந்த சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

வற் வரி அதிகரிப்பு தொடர்பில் புதிய பழைய வாகன இறக்குமதியாளர்கள் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரை நேற்றைய தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

வெளிநாட்டு நாணயப் பெறுமதி தளம்பல் நிலையும் வாகன விலை உயர்வடையக் காரணமாகும் என தெரிவித்துள்ளார்.

வற் வரியில் மாற்றம் செய்யப்படாவிட்டால் வாகனங்களின் விலைகள் 300000 முதல் 400000 ரூபா வரையில் உயர்வடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார கட்டமைப்பினால் வாகன இறக்குமதியாளர்கள் பாரியளவு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வெற் வரி அதிகரிப்பு காரணமாக 100 வாகனங்களை இறக்குமதி செய்தவர்கள் தற்போது 30 வாகனங்களையே இறக்குமதி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE