வவுனியாவில் பொருளாதார மத்திய அபிவிருத்தி நிலையம் அமைப்பது தொடர்பாக ஊடகவியலாளர் சிறிரங்காவின் கருத்து உண்மைக்குப் புறம்பானது – வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநி சத்தியலிங்கம்.

308

P1010221 - Copy
வவுனியா மாவட்டத்தில் பொருளாதார மத்திய அபிவிருத்தி நிலையமொன்றை நிறுவுவதற்காக வடமாகாணசபை அமைச்சரான சத்தியலிங்கம் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை கேட்டுக்கொண்டதுக்கு அமையவே இந்த பொருளாதார மத்திய மையம் அமைப்பதற்கான அனுமதி தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. இதிலும் மாறுபாடான கருத்தைத் தோற்றுவித்து குழப்பும் நடவடிக்கைகளில் பல ஊடகங்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட்டு வருகின்றனர். அமைச்சர் ரிஷாட் பதியூதீனிடம் இவ் வர்த்த மையம் அமைப்பது தொடர்பாக கென்சாட் ஒப்புதல் வாக்குமூலத்தைத் தாரைவார்த்து அமைச்சர் சத்தியலிங்கம் கொடுத்துவிட்டார் என்ற கருத்தாடலானது உண்மைக்குப் புறம்பானது. இதற்கும் அமைச்சர் ரிஷாட்டுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.

வடபகுதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், அமைச்சர் என்ற வகையிலும் ரிஷாட் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். இதில் நாம் சுயநலநோக்கத்தோடு செயற்படவேண்டியதன் தேவை இல்லை. குற்றம் கூறுபவர்கள் கூறிக்கொண்டே இருப்பார்கள். மின்னல் நிகழ்ச்சியின் ஒழுங்கமைப்பாளரான ரங்கா அவர்கள் இவ்வாறான கருத்தை முன்வைக்கின்ற பொழுது இது தொடர்பான உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளத பாராளுமன்றத்தின் இரு உறுப்பினர்களும் அதனை மறுத்துப் பேசவில்லை. காரணம் அவர்களுக்கு உண்மைத்தன்மை தெரியாது.

அமைச்சர் சத்தியலிங்கம் அவர்கள் இரட்டை வேடம் செய்கின்றார் என்பதைக் கூறிய ஊடகவியலாளர் ரங்கா அவர்களுக்கும் இந்த அபிவிருத்தி வர்த்தக மையம் அமைப்பது தொடர்பாக அறிவில்லாத செயற்பாட்டையே எடுத்துக் காட்டுகின்றது.
எமது பிரதேசத்தில் ஒரு வர்த்தக மையம் அமையப்பெறுவதற்கும் அதனை நாம் முஸ்லீம் அமைச்சர்களுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கும் எம்மை அவர்கள் ஒரு முட்டாள் என நிறைக்கின்றார்கள். அல்லது அமைச்சர் ரிஷாட் பதியூதீன் அவர்களுக்கு சோரம் போய்விட்டதாகவே இந்த நேர்காணலில் மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.ஒரு சாராரை உயர்த்தி, ஒரு சாராரை தாழ்த்தி பேசுவது என்பது ஊடகவியலாளர் ரங்கா அவர்களுக்குப் பரம்பரைத் தொழில் மஹிந்த ராஜபக்ஷ அரசாட்சிக் காலத்தில் அமைச்சர் ரிஷாட் பதியூதினிடம் கன்னத்தில் அறைவாங்கிய சம்பவம் ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும், முகநூல்களிலும் பெரும் பரபரப்பாகவே இடம்பெற்றது. மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல், டக்ளஸ்தேவானந்தா போன்றவர்களுடன் கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் கைகோர்த்து தமிழினத்தை விற்றுப் பிழைப்பு நடத்தியவர்தான்

RANGA WITH MAHINDHA AND NAMAL Ranka vavuniya land master1

இந்த சிறிராங்கா இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினிடையேயும், தமிழரசுக் கட்சியிடையேயும், ஆயுதக் கட்சிக்கிடையேயும், வடமாகாணசபையினிடையேயும் கருத்து முரண்பாடுகளைத் தோற்றுவித்து தமிழர் பகுதியில் ஒருவர்த்தக மையத்தை அமைப்பதற்குப் பதிலாக சிங்களவர்களுடைய பிரதேசத்தில் அமைப்பதற்கு ஊடகவியலாளர் சிறிரங்கா முற்படுகின்றார்.

அரசாங்கத்துடன் கைகோத்து நடக்காத வரையிலும் அவருடைய மின்னல் நிகழ்ச்சி ஒரிடத்தைப் பிடித்திருந்தது. அவர் என்று தனது நரிப் புத்தியைக் காட்ட முனைந்தாரோ அன்றிலிருந்து தனது சொந்த அரசியலை வளர்ப்பதற்காகவே அவர் செயற்படுகின்றாரே தவிர வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை என்பதை அவரது நேர்காணல் எடுத்துக்காட்டுகின்றது. சாதாரணமாக கையாளப்படவேண்டிய இந்த வர்த்தக மையம் தொடர்பான பிரச்சனை முஸ்லீம் அமைச்சர் ஒருவருக்கு தரைவார்க்கப்படப்போகின்றது என்ற விடயத்தைக் கூறியிருந்தவர் ஊடகவியலாளர் சிறிரங்கா தான் இது உண்மையில் அப்பட்டமான பொய் வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போன்ற செயற்பாடுகளை ஊடகவியளார் செயற்படுத்துவது அது எமது தமிழ் சமூதாயத்தினையே பாராதூரமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும்.

எமது பிரதேசத்தில் ஒரு வர்த்தக மையம் வருவதையிட்டு நாம் பெருமை கொள்வதோடு அதனுடைய செயற்பாடுகள் முடியும் வரை ஒருவரை ஒருவர் தூண்டி அல்லது வேடிக்கை பார்த்து நாம் குளிர்காயக்கூடாது. அவ்வாறு செயற்படுகின்ற பொழுதுதான் எமது தேசியம், சுயநிர்ணய உரிமை என்பன பாதுகாக்கப்படும்.
இந்த வர்த்தக மையம் அமைப்பது தொடர்பாக 28.04.2016 இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடன் வடமாகாண முதலமைச்சர் கலந்துரையாடியதன் பின்னர் அது எங்கு அமையப்பெறப்போகின்றது என்பது அறிவிக்கப்படும் அதற்கு முன்னர் வீன் விதண்டாவதாங்களைப் பேசி குழப்பும் நடவடிக்கையில் எந்த அரசியல் வாதிகளும், ஊடகவியளார்களும் ஈடுபடக் கூடாது. இவ் பிரச்சனை தொடர்பில் ஊடகவியளார் சந்திப்பை ஏற்படுத்தியபோது அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்த கருத்து………

ஊடகவியலாளர் சந்திப்பின் 23.04.2016 மறுநாள் வடமாகாணசபை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள் ஒருங்கிணைத்து அமைச்சர் சந்தியலிங்கம் அவர்கள் வவுனியாவில் ஒரு கூட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தார். அதில் இன்று முதலமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவைச் சந்தித்து முடிவு எடுப்பதாக எமக்கு உத்தரவாதம் வழங்கியிருக்கின்றார். அதன் பின்னர் தான் எங்கு இந்த வர்த்தக மையத்தை அமைப்பது என்ற முடிவை வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்வோம். அது வரையிலும் இவ்விடயம் தொடர்பில் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்ளாது ஊடாகங்களும், அரசியல் வாதிகளும் செயற்படவேண்டும் என்பதே எமது வினயமான வேண்டுகோள்.

SHARE