வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் மக்களின் நலனை கருத்தில் கொண்டே முன்னெடுக்கப்பட்டுள்ளது –  வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன்

159
-மன்னார் நிருபர்-
வவுனியாவில் சுகாதார திணைக்கள ஊழியர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் மக்களின் முறைப்பாடுகளுக்கு அமைவாக மக்களின் நலனை கருத்தில் கொண்டே முன்னெடுக்கப்பட்டதாக வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள உப அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வவுனியாவில் கடந்த 31 ஆம் திகதி (31-07-2018) வெளிக்கல நடவடிக்கை ஒன்றை சுகாதார திணைக்களத்தின் ஊழியர்களுடன் இணைந்து நான் மேற்கொண்டேன்.
வழமை போல் எமது  அடிப்படை நோக்கம் உத்தியோக பூர்வமற்ற அல்லது சட்ட விரோதமான மருத்துவம் அல்லது சிகிச்சைகள் அல்லது சுகாதாரம் சேர்ந்த விடையங்களில் சட்டத்திற்கு விரோதமானவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று உறுதியாக இருந்து குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்றைய தினம் இரண்டு மருந்தகங்கள் மற்றும் மூன்று மருத்துவ சிகிச்சை நிலையங்கள் மற்றும் பரிசோதனைகளுடன் கூடிய வைத்தியசாலைகள் என்று கூறக்கூடிய இரண்டு சிறிய அளவிலான வைத்தியசாலைகள் எங்களினால் திடீர் சோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டது.
இதன் போது இரண்டு மருந்தகங்களும் சட்ட பூர்வமான அனுமதிப்பத்திரங்கள் இல்லாமலே பல வருடங்களாக தொழிற்பட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
குறித்த இரு மருந்தகங்கள் தொடர்பிலும் உடனடியாக திணைக்கள ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
மேலும் வைத்தியர்களினால் நடாத்தப்படும் மூன்று தனியார் சிகிச்சை நிலையங்கள் பார்வையிடப்பட்டது.
குறிப்பாக குறித்த தனியார் சிகிச்சை நிலையங்கள் ஆயுள் வேத அல்லது பாரம்பரிய மருத்துவத்திற் கூறிய பட்டப்படிப்பை மேற்கொண்டவர்களினால் நடாத்தப்பட்டு வந்தது.
அதிகலவான முறைப்பாடுகள் வவுனியா தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்று வருகின்றது.
 குறிப்பாக சட்ட விரோதமான வைத்தியர்களினுடைய அல்லது சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உடனடியாக அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் எமக்கு கிடைத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக எழுந்தமானமாக வவுனியாவில் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டோம்.
குறித்த மூன்று சிகிச்சை நிலையங்களில் இரண்டு சிகிச்சை நிலையங்களில் அதிகலவிலான மேற்கத்தைய மருந்து வகைகள் கைப்பற்றப்பட்டது.
ஆயுள் வேத அல்லது பாரம்பரிய மருந்து சிகிச்சைகளை வழங்கக்கூடிய பட்டப்படிப்பை மேற்கொண்டவர்கள் ஆங்கில மருந்து வகைகளை அல்லது மேற்கத்தைய மருந்து வகைகளை கொண்டு சிகிச்சை வழங்க சட்டத்தில் இடம் இல்லை.
இவ்விடையம் தொடர்பில் சம்பந்தப்பட்ட குறித்த சிகச்சை நிலையங்கள் மீதும் உரியவர்கள் மீதும்  சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ பரிசோதனை வசதிகளுடன் கூடிய இரண்டு வைத்திய நிலையங்கள் எங்களினால் பரிசோதனைகளுக்கு உற்படுத்தப்பட்ட போது அங்கே இயங்குகின்ற கதிர் படம் (எக்ஸ்றே) பிடிக்கின்ற பிரிவு ஆனது அடிப்படையான கதிர் படம் எடுக்கின்ற அடிப்படை தகுதிகளை கொண்ட அமைவிடத்திலே அமைக்கப்படவில்லை.
அதற்கான அடிப்படை தேவைகளை கதிர் படம் (எக்ஸ்றே) எடுக்கின்ற அறையானது பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.
மேலும் கதிர் படம் எடுப்பதற்கான அனுமதிப்பத்திரம் அனுசக்தி மீள் சக்தி அமைச்சிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படவேண்டிய அனுமதிப்பத்திரமும் அங்கே காணப்படவில்லை.
எனவே குறைபாடுடைய கதிர்ப்படம் எடுக்கின்ற அந்த அறைகளினுள்  தொடர்ச்சியாக கதிர்ப்படம் எடுக்கின்ற போது அதில் இருந்து கதிர் வீசல் வெளிப்புறமாக வருவதற்கூறிய ஆபத்து அங்கே இருக்கின்றது.
அதனால் அங்கே கடமையாற்றுகின்றவர்களையும் , அயல் பகுதி மக்களையும் பாதீக்கலாம்.
சரியான பாதுகர்பபான முறையில் கதிர் வீச்சு வெளியில் செல்லாத வகையில் அந்த அறைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அடிப்படை விடையங்கள் அங்கு மேற்கொள்ளப்படவில்லை.
அதனை எங்களுடைய உயிர் மருத்துவ பொறியியலாளர்  உறுதிப்படுத்தியுள்ளதோடு,அறிக்கைமூலமும் தந்துள்ளார்.
எனவே பொது மக்களுக்கும், அங்கு கடமையாற்றுகின்றவர்களுக்கும் பாதீப்பை ஏற்படுத்தக்கூடிய அல்லது கதிர் வீச்சுக்களை உறுவாக்கக்கூடிய இவ்வாறான கதிர்ப்படம் எடுக்கின்ற அறைகள் தொழிற்படுவதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது.
எனவே திணைக்களத்தின் ஊடாக கடிதம் அனுப்பியுள்ளோம். உடனடியாக அச்செயற்பாடுகளை நிறுத்தி சரியான முறையில் அடிப்படையான விடையங்களை பூர்த்தி செய்து அனுமதிப்பத்திரத்தை பெற்ற பின் தொடர்ந்து நடத்துமாறு அறிவுரை கூறியுள்ளோம்.
மக்களுக்கு ஓர் விழிர்ப்புணர்வு வேண்டும் கதிர் வீச்சலினால் புற்று நோய்  ஏற்படக்கூடிய பாரதூரமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கதிர் படம் எடுக்கின்ற அந்த நிர்வாகத்தினர் குறித்த அறைகள் தொடர்பில் சரியான சட்ட நடவடிக்கைகளை கடைபிடிப்பதற்கான ஆர்வம் காட்டுவது போல் தெரியவில்லை.
கடந்த 31 ஆம் திகதி பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தோம். ஆனால் மறுநாள் 1 ஆம் திகதி ஒரு அனுமதிப்பத்திரம் கொழும்பில் இருந்து உடனடியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
ஒரு குழுவினர் கொழும்பில் இருந்து வந்து நேரடியாக பரிசோதித்து தமது நிபந்தனைகளுக்கு அமைவாக அந்த அறை கட்டப்பட்டுள்ளதா என்பதனை பார்த்த பின்பு அதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.
ஆனால் 24 மணி நேரத்திற்குள் ஒரு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அனுமதிப்பத்திரத்தில் கூட சில தரவுகள் பிழையாக காணப்பட்டுள்ளது.
வேறு ஒரு இடத்திற்கான அனுமதிப்பத்திரத்தை குறித்த இடத்திற்கு பாவிப்பது போன்று பிழையான தகவல் அதில் இருப்பதினால் குறித்த அனுமதிப்பத்திரம் தொடர்பில் நாங்கள் சந்தேகத்திற் குற்படுத்தியுள்ளோம்.
இது தொடர்பாக உரிய அமைச்சிற்கும் நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளோம்.
பொது மக்கள் இவ்விடையங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
மருத்துவம் தொடர்பான விடையங்கள் மிகவும் முக்கியமானவை. சரியான தகுதி உடையவர்களினால் மருத்துவம் வழங்கப்பாது விட்டால் இதன் பக்க விளைவுகள் பாரதூரமாக இருக்கும்.
எமது திணைக்களத்தினால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் அனைத்தும் நல்ல நோக்கத்திற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது என்பதனை மக்கள் புறிந்து கொள்ள வேண்டும்.
எழுத்து மூலம் வழங்கியுள்ளோம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் கதிர்ப்படம் எடுக்க முடியாது என உத்தியோக பூர்வ கடிதம் அனுப்பியுள்ளோம்.
ஆனால் அங்கே தொடர்ந்து கதிர்ப்படம் எடுக்கப்பட்டு வருவதாக நாங்கள் அறிகின்றோம்.எங்களுடைய திணைக்கள நடவடிக்கைகள் மத்திய அரசுடன் இணைந்து மேற்கொள்ளுவதினால் கால தாமதங்கள் ஏற்படலாம்.
ஆனால் மக்களை பொருத்த வகையில் இது ஒரு அவசரம்.வவுனியாவில் 2 ஆம் குறுக்குத்தெருவில் உள்ள ஒரு மருத்துவ சிகிச்சை நிலையத்திலும் வவுனியா பொது வைத்தியசாலை சுற்று வட்ட வீதியில் உள்ள ஒரு மருத்துவ நிலையத்திலுமே இந்த குறித்த கதிர்படம் எடுக்கின்ற வசதிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அங்கே தான் குறித்த குறைபாடுகள் எங்களினால் அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான விடையங்களில் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.வவுனியா பொது வைத்தியசாலை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
அங்கே நிறைய நிர்வாக குழப்பங்கள் காணப்படுகின்றது. இவ்விடையங்கள் தொடர்பில் உயர் நிர்வாக அதிகாரிகள் மீது  சில நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
மேலுவும் வவுனியா ‘சதோச’ விற்பனை நிலையத்தில் சீனிக்குள் யூறியா கலந்த நிலையில் விற்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பதற்கு அப்பால் குறித்த சம்பவம் தொடர்பில் நீதி மன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE