விச ஊசி குற்றச்சாட்டை நிராகரிக்கும் புனர்வாழ்வு ஆணையாளர்

168
புனர்வாழ்வு முகாம்களில்  தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக்க ரத்நாயக்க நிராகரித்துள்ளார்.
இறுதிக்கட்ட போரின் போது கைதுசெய்யப்பட்ட மற்றும் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு முகாம்களில் விச ஊசி ஏற்ற வேண்டிய அவசியம் தமக்கு இருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவலை அடைவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பிலான மக்களின் கருத்துக்களை அறிந்துவரும் மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான செயலணி வன்னியில் நடாத்திய அமர்வுகளில் கலந்துகொண்ட முன்னாள் போராளிகள் சிலர் தமக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து சந்தேகத்துக்கு இடமான ஊசிகள் பலவந்தமாக ஏற்றப்பட்டதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.
இதேவேளை புனர்வாழ்வு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும்  நாடாளுமன்றத்திலும் தகவல் வெளியிட்டிருந்த நிலையிலேயே  புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
SHARE