விஜயகாந்த் மகனுக்கு இந்த உதவியை நான் செய்ய போகிறேன்!! நடிகர் ராகவ லாரன்ஸ் வாக்குறுதி

48

 

நடிகர் விஜயகாந்த் சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவை போலவே வாழ்ந்து மறைந்துவிட்டார். தற்போது வரை இவரின் இழப்பில் இருந்து அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மீள முடியாமல் இருக்கின்றனர்

விஜயகாந்தின் மூத்த மகன் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், இரண்டாம் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கு முன்பு சண்முக பாண்டியன் சில படத்தில் நடித்திருந்தாலும் அந்த படம் பெரிய அளவில் அவருக்கு கைகொடுக்கவில்லை.

சூர்யா, விஜய் எனப் பல ஹீரோக்கள் படங்களில் கேமியோ ரோலில் நடித்து, அவர்களை சினிமாவில் உயர்த்திவிட்டவர் தான் விஜயகாந்த். ஆனால் அவருடைய மகன் சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் உதவ யாரும் இல்லை என்ற பேச்சு சமீபத்தில் சினிமா வட்டாரத்தில் எழுந்தது.

உதவி
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அதில், சினிமாவில் பலருக்கு உதவியவர் தான் விஜயகாந்த். நிறைய ஹீரோக்கள் படங்களில் கேமியோ ரோலில் நடித்து கொடுத்து இருக்கிறார். அவரது மகன் சண்முக பாண்டியனுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்யலாம் என்கிற எண்ணம் எனக்குள் தோன்றியுள்ளது. சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் கேமியோ ரோலில் நடித்து கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

 

SHARE