வித்தியா வழக்கிற்கு வந்திருந்த பெரும்பான்மை சட்டத்தரணிகள் தொடர்பில் சந்தேகம்: சட்டத்தரணி தவராஜா (வீடியோ இணைப்பு)

456

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இரண்டாவது தடவையாக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அங்கு வந்திருந்த மூன்று பெரும்பான்மையின சட்டத்தரணிகளின் நடவடிக்கைகள் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதாக வித்தியாவின் குடும்பம் சார்பாக ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜா குறிப்பிட்டுள்ளார்.

thavaraja-court-010615-380-seithy

வித்தியா படுகொலை வழக்குத் தொடர்பான இன்றைய விசாரணைகள் முடிவுற்ற பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்ட வித்தியா சார்பில் ஆஜராக வந்திருந்தால் அதற்காக நீதிமன்றப் பதிவேட்டில் பெயரை பதிவு செய்துவிட்டு என்னுடன் இணைந்து ஆஜராகுமாறு நான் கோரிய போதும், அவர்கள் தாங்கள் இவ்வழக்கை கவனிக்கவே வந்திருந்ததாகக் கூறியிருந்தார்கள். இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

இதேவேளை, வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய ஆதாரங்கள் ஏதாவது தெரியுமானால், அதனை உடனடியாக விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரிடம் தெரிவித்து வழக்கு நடவடிக்கைகளுக்கு உதவுமாறும் சட்டத்தரணி கே.வி.தவராஜா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

SHARE