வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பரிசோதனை!

269

தென்கொரியாவில் இருந்து இலங்கை செல்வோர் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான பயணிகளுக்கு இன்று முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

தென் கொரியாவில் பரவியுள்ள மேர்ஸ் வைரஸ் இலங்கையில் பரவுவதனை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் டி.எம்.டி திஸாநாயக்க குறிப்பிட்டார்.

இந்த வைரஸ் தொற்று மிகவும் அபாயகரமானது என்பதனால், தென் கொரியாவில் இருந்து வருகைதரும் பயணிகள் விமான நிலையத்திலுள்ள சுகாதார அலுவலகத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

பயணிகள் வீடு திரும்பிய பின்னரும் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று மீண்டுமொரு முறை தம்மை பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

SHARE