ஷேவாக்குக்கு என்ன ஆச்சு? டுவிட்டரில் சும்மா அதிருதுல்ல

232

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)

கிரிக்கெட் போட்டிகளில் வீரேந்திர ஷேவாக்குக்கு தனி ஸ்டைல் இருக்கும், இதேபோல் சமீப காலமாக தனிப்பட்ட டுவிட்கள் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார்.

கடந்த வாரம் டோனியின் பிறந்தநாள் அன்று‘தேசிய ஹெலிகாப்டர் நாள்’ என ஹேஷ்டேக் செய்து அசத்தினார்.

இதேபோன்று லார்ட்ஸ் மைதானத்தில் மேலாடை இல்லாமல் இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியை கொண்டாடிய கங்குலியை நடிகர் சல்மான்கானுடன் ஒப்பிட்டு டுவிட் செய்துள்ளார்.

அதில், 14 ஆண்டுகளுக்கு முன் கங்குலி, சல்மான் கான் போல் செய்து (மேலாடை இல்லாமல்) அனைவரின் இதயங்களையும் வென்றார் என தெரிவித்துள்ளார்.

14 ஆண்டுகளுக்கு முன் (ஜூலை 13) இங்கிலாந்திற்கு எதிராக 326 ஓட்டங்களை வெற்றிகரமாக சேஸிங் செய்து, இந்தியா தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

View image on Twitter

14 years ago on this day we won the NatWestSeries &@SGanguly99 did a Salman Khan & won everyone’s hearts.

SHARE