ஹர்பஜன் சிங்கால் மலர்ந்த காதல்: தன்னை விட 10 வயது மூத்த பெண்ணை 2வது முறையாக மணந்த தவான்

242

 

இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக அசத்தி வருபவர் ஷிகர் தவான்.

இவர் 1985ம் ஆண்டு டிசம்பர் 5ம் திகதி டெல்லியில் பிறந்தவர். இவரது குடும்பம் ஒரு பஞ்சாபி குடும்பம். தவான் 12 வயதிலே தனது கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி விட்டார்.

சொனட் கிரிக்கெட் கிளப்பில் டார்க் சின்கா என்ற பயிற்சியாளர் தான் அவருக்கு பயிற்சி அளித்தார். அவர் இதுவரை ஷிகர் தவான் உட்பட 12 சர்வதேச கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி உள்ளார்.

ஆரம்ப கட்டத்தில் விக்கெட் கீப்பராக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த தவான், 2010ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்.

அதன் பின்னர் இந்திய அணியில் தொடக்க வீரராக காலடி பதிக்க ஆரம்பித்தார்.

இவரது கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாக அமைந்தாலும், அவரது திருமண வாழ்க்கையே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதற்கு காரணம் அவர் தன்னை விட 10 வயது மூத்த பெண்ணை காதலித்து 2வது முறையாக மணந்துள்ளார்.

இருப்பினும் இவர்களது காதல் கதையும் சுவாரஸ்யம் நிறைந்த ஒன்றாகவே உள்ளது. இவர்களது காதலுக்கு விதை போட்டது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தான்.

அவர் ஆய்ஷா முகர்ஷி என்ற பெண்ணை தவானுக்கு பேஸ்புக் மூலம் அறிமுகப்படுத்தி வைத்தார். பெங்காலியான அவர் அவுஸ்திரேலியாவில் வசித்து வந்தார்.

அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. முதல் கணவர் மூலம் அவருக்கு ரியா, அலியா என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தது.

இருப்பினும் ஆய்ஷா அழகில் மயங்கிய தவான் அவரை காதலிக்க தொடங்கினார். பின்னர் பெற்றோர் விருப்பத்துடன் 2012ம் ஆண்டு தவான் அவரை மணந்து கொண்டார்.

கடந்த 2014ம் ஆண்டு ஆய்ஷாவிற்கு தவான் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஷொராவர் என பெயர் சூட்டியுள்ளனர்.

 

SHARE