ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது டிவில்லியர்ஸ் அடித்த ஒரு ஷாட்டால் சில நிமிடம் தடைபட்ட போட்டி

118

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது டிவில்லியர்ஸ் அடித்த ஒரு ஷாட்டால் போட்டி சில நிமிடம் தடைபட்டது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய முக்கிமான போட்டியில் பெங்களூரு அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பெங்களூ அணி வீரர் டிவில்லியர்ஸ் வாணவேடிக்கை காட்டினார். 39 பந்தில் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகள் அடித்து 69 ஓட்டங்கள் குவித்து அணியின் எண்ணிக்கை வலுவான நிலைக்கு வர பெரிதும் உதவினார்.

அதுமட்டுமின்றி பீல்டிங்கின் போது அற்புதமாக பறந்து கேட்ச் பிடித்தார். இதைக் கண்ட விராட் கோஹ்லி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஸ்பைடர் மேனை நேரில் பார்த்தேன் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த போட்டியில் ரசித் கான் வீசிய 6.2-வது ஓவரில் அற்புதமாக பவுண்டரி அடித்தார். ஆனால் அது மூன்றாவது நடுவரால் பவுண்டரியா, சிக்ஸரா என கண்டறிய சில நிமிடங்கள் ஆனது.

என்ன தான் பல தொழில்நுட்பங்கள் இருந்தாலும் டிவில்லியர்ஸின் பவுண்டரியை கண்டறிய போட்டி நடுவர்கள் மிகவும் சிரமப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE