10 ஆயிரம் வீடுகள் கட்டித்தருகிறேன் மோடி

149

மலையக மக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இந்தியா அனைத்து பங்களிப்புகளையும் வழங்கும் என பல்லாயிரகணக்கான மக்கள் மத்தியில்  இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்திய அரசின் நிதியுதவியுடன் மலையகத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நான்காயிரம் வீடுகளுக்கு மேலதிகமாக 10 ஆயிரம் வீடுகள் நிர்மாணித்து வழங்கப்படும் என றும்  பாரத பிரதமர் உறுதியளித்தார்.
 இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால வரலாற்று உறவுகளை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி கடந்த காலங்களை போன்றே  எதிர்காலத்திலும் இலங்கையுடன் மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
தமதுரையின் போது தமிழிலும் சிலவார்த்தைகளை கூறிய இந்திய பிரதமர்   தோட்ட தொழிலாளர்களை விளித்து சகோதர சகோதரிகளே மலையகத்திற்கு வருகைத்தந்து உங்கள் முன் உரையாற்றக்கிடைத்தமையை பெரும் பாக்கியமாக கருதுகிறேன் எனவும் தெரிவித்தார்.
இ.தொ .கா, தமிழ் முற்போக்கு கூட்டணி உட்பட மலையகத்தின் பிரதான கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்த பாரத பிரதமர்ரை வரவேற்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டம்  நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
 ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட முக்கிய அமைச்சர்கள் .இருநாடுக களினதும் இராஜதந்திரிகள்  கலந்துகொண்ட இந் நிகழ்வில் மலையகத்தின் சகல பகுதிகளிலும் இருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பாரத பிரதமர் நரேந்திர மோடி,  இந்திய பிரதமர்  ஒருவர்  இலங்கையின்அழகிய மலையக பிராந்தியத்திற்கு விஜயம் செய்தது இதுவே முதல்தடவை என்பதை  கௌரவமாக கருதுகிறேன்.
  உலக புகழ் மிக்க  தேயிலை  ஏற்றுமதியில்இலங்கை  மூன்றாவது  இடத்தை வகிக்கிறது   இது மலையக  மண்ணில்தான் விளைகிறது என்பது முழு உலகமே அறியும் அத்தகைய புகழ்பெற்ற இந்த தேயிலை உங்கள் உழைப்பின் மூலமே உற்பத்தியாகிறது அது  அறிந்திறாததே உன்மை  இங்கைக்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் இலங்கை தேயிலை உங்கள் அயராத உழைப்பின் பயனே.
உலக நாடுகளின் 17 வீத தேயிலையின்  தேவையை உங்கள் தேயிலையே நிவர்த்தி செய்கிறது.
இதன் மூலம் இலங்கைக்கு 150 கோடி அமெரிக்கன் டொலரை  வருமானமாக ஈட்டித்தருகிறது.
 இந்த வகையில் இலங்கை தேயிலை உற்பத்தியின் முதுகெழும்பு நீங்களே உலக நாடுகளின் வரவேற்பை பெற்றுள்ள உங்கள் உழைப்பின் அர்பணிப்பை நான் பாராட்டுகிறேன்.
உங்களுக்கும் எனக்கும் அதே போல தேயிலைக்கும் என நெருங்கிய தொடர்புள்ளமை பலர் அறியாதது தேனீர் கலந்துரையாடலானது சுமூகமானது மற்றுமன்றி உழைப்பின் உன்னதத்தை அர்த்தப்படுத்துவதாகவும் அமைகிறது.
நான் உங்களது முன்னோர்களை நினைவு கூற விரும்புகிறேன் அவர்கள் வலிமையான மனோதிடத்துடன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தமது பயணத்தை மேற்கொண்டனர் அதன் போது அவர்கள் கடுமையான இன்னல்களையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டி இருந்தது எனினும் அவர்கள் அந்த பயணத்தில் பின்நிற்கவில்லை “இத்தருனத்தில் அவர்களின் மனோதிடத்தை நினைத்து தலைவணங்குகின்றேன்.
 அதே போன்று உங்கள் தலைமுறையும்  கஸ்டங்களையும் போராட்டங்களையும் எதிர்கொண்டுள்ளது புதிதாக சுதந்திரம் கிடைத்த நாட்டின் உங்கள் தனித்துவதை அடையாளப்படுத்த பெரும் பகிரத பிரயத்தனம் செய்தீர்கள் உங்கள் உரிமைகளுக்காக போராடினீர்கள் இவற்றை எல்லாம் நீங்கள் அமைதியாகவே செய்தீர்கள் என்பது வரவேற்கத்தைக்கது உங்களது உரிமைக்காகவும் பெருளாதார மேம்பாட்டுக்காகவும் அர்பணிப்புடன் உழைத்த சௌமியமூர்த்தி தொண்டமான் போன்றோர் மறைக்கமுடியாதவர்கள்.
யாதும் ஊரே  யாவரும் கேளீர் ..என தழிழறிஞர் பூங்குன்றனார் தெரிவித்துளார்  இது எல்லா ஊர்களும் ஒன்றே எல்லா மக்களும் ஒன்றே என்பதையே பரைசாற்றுகிறது அதன் உண்மையான அர்த்தத்தை நீங்கள் பிரதிபலிக்கின்றிர்கள் இலங்கையை உங்கள் வீடாக்கி கொண்ட நீங்கள் இந்த அழகிய தேசத்தில்  பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டீர்கள் நீங்கள் அனைவரும் தமிழ் தாயின் பிள்ளைகள்.
உலகில்  உள்ள மொழிகளில் மிகவும் பழைமை வாய்ந்த மொழி தமிழ் மொழி அந்த மொழியையே நீங்களும் பேசுகிறீர்கள் அத்தோடு சிங்க மொழியையும் பேசுகின்றீர்கள் என்பது பெருமைக்குறியது மொழி என்பது மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் ஊடகம் மட்டுமல்ல அது ஒரு கலாசாரத்தையும் வரையறுக்கின்றது சமூகங்களை பிணைக்கிறது பிரிந்தவற்றை சேர்க்ககவும் ஒரு வலுவான சக்தி  அதற்கு உண்டு.
 சமூக வேறுபாடுகள் கொண்டாட்டங்களுக்கு வழிசமைக்க வேண்டுமே தவிர முரண்பாடுகளுக்கு வித்திடக்கூடாது.
நம்முடைய வரலாறு காலம் காலமாக பின்னிப்பிணைந்தது ஜாதகக்கதைகள் உட்பட வரலாறு பதிவுகளை கொண்டது இலங்கை மன்னர்கள் தஞ்சாவூர் நாயக்கர்களுடன் பெண்கொடுத்து பெண் வாங்கியுள்ளார்கள் தழிழும் அவர்களது அரசசபை மொழியாக இருந்தது பௌத்த தேவாலயங்களும் இந்து ஆலயங்கைளும் சமமாக வணங்கப்பட்டன.
இத்தகைய ஒற்றுமையையும் நல்லினக்கத்தையும் நாம்  மேம்படுத்த வேண்டுமே தவிர பிரித்தாள நினைக்க கூடாது இதனை முன்னெடுத்து செல்வதற்கு நீங்களே தகுதியானவர்கள் என்றால்  மிகையாகாது.
 மாகாத்மாகாந்தி பிறந்த ஊரான இந்தியாவின் குஜராத் மானிலமே எனது ஊறாகும் 100 வருடங்களுக்கு முன்பு இலங்கைக்கு  விஜயம் செய்த காந்தி கண்டி. மாத்தளை.பண்டாரவளை.அட்டன் உள்ளிட்ட அழகியபிதேசத்திகு வருகைதந்துள்ளார் அவரது முதலும் கடைசியுமான அந்த பய’ணத்தின் நோக்கம் உங்கள் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதே அந்த பயணத்தை நினைவுகூறும்  வகையில்   மாத்தளையில் மகாத்மாகாந்தி மையம் இந்திய நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மற்றொரு  தலைவரான புரட்சி தலைவர்  எம்.ஜி ராமச்சந்தின் பிறந்தும் இந்தமண்ணில் தான் அதே போன்று சிறந்த புகழ் பெற்ற பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரனை நீங்களே உலகுக்கு அன்பளித்தீர்கள்.
உங்களின் முன்னேற்றமே எங்கள் மகிழ்ச்சியாகும் பல்வேறு துறைகளில் உங்கள் சாதனைகள் கண்டு மகிழ்சியடைகிறேன் கிழக்கு மேற்கு என்று அனைத்து பரப்பிலும் தம்மை அடையாளப்படுத்தும் இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பில் நான் பெருமையடைகிறேன் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலுள்ள முக்கிய இணைப்பு நீங்கள் இரு நாட்டு பந்தங்களின் தொடர்ச்சியாகவே நாம்  உங்களை பார்க்கிறோம் இந்த வளர்ச்சிக்கு முன்னுரிமையளிப்பதை எனது அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது அனைத்து  இலங்கை  மக்களுக்கும் உதவும் வகையில் இந்த கூட்டுறவை மேம்படுத்துவதே எமது நோக்கம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
SHARE