150 மனித உடல்களுடன் ஒரு வாரமாக ஊருக்குள் சுற்றிய லொறி

92

அமெரிக்காவின் மெக்சிகோவில் 150 இறந்த உடல்களுடன் லொறி ஒன்று தெரு தெருவாக சுற்றி வருவதைக் கண்டு அப் பகுதி மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.

அமெரிக்காவின் மெக்சிகோ பல விதமான பிரச்சனைகளில் சிக்கி தவிக்கிறது. அந்த நாட்டில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கில் மக்கள் அமெரிக்காவிற்கு முறையில்லாமல் குடியேறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் மெக்சிகோவின் கோடலஜாரா என்ற பகுதியில் சுமார் 150 இறந்த உடல்களுடன் தெரு தெருவாக சுற்றும் லொறி ஒன்றால் மக்கள் பெரிய அளவில் பீதியடைந்துள்ளனர்.

இந்த லொறியில் என்ன உள்ளது என்று அங்கு இருந்த மக்களுக்கு முதலில் தெரியாமல் இருந்துள்ளது. அத்தோடு குறித்த லொறி போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாக கூறி அதனை அடிக்கடி இடமாற்ற கூறிய அப்பகுதி மக்கள். இந்த லொறியை எங்கள் வீடு முன் நிறுத்த வேண்டாம், தெருவில் நிறுத்த வேண்டாம் எனவும் தெரிவித்தனர்.

ஆனால் அப்போதும் கூட, குறித்த லொறிக்குள் என்ன உள்ளது என மக்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் அந்த லொறியில் இருந்து அதிக அளவில் துர்நாற்றம் வரவே, அது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த லொறியினுள் முழுக்க முழுக்க இறந்த மனிதர்களின் பழைய உடல்கள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த லொறிக்குள் சுமார் இறந்த 150 உடல்கள் இருந்துள்ளன இவையனைத்தும் சுமார் ஒரு மாதத்திற்கு முன் இறந்த மனிதர்களின் உடல்கள் என்றும் அவற்றுக்கு யாரும் உரிமை கோராமையினால் குறித்த உடல்களை புதைக்க இடமில்லாமல் லொறில் வைத்துள்ளார்கள்.

மெக்சிகோவில் தற்போது இத்தனை உடல்களை புதைக்க இடமில்லையாம். இதனால், இதை கடந்த ஒருவாரமாக லொறியில் வைத்துக்கொண்டு பயணித்துள்ளார்கள். தற்போது குறித்த உடல்களை புதைக்க இடமொன்று தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றை புதைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

SHARE