150 மில்லியன் ரூபாய் பெறுமதியான கலைப்பொருட்கள் களவாடப்பட்ட விடயத்தில் எஸ்.பிக்கு தொடர்பா?

261
கொழும்பு 7 இல் உள்ள வீடொன்றிலிருந்து 150 மில்லியன் ரூபாய் பெறுமதியான கலைப்பொருட்கள் களவாடப்பட்ட விடயத்தில் முன்னாள் உயர்கல்வியமைச்சர் சந்தேகநபரா என்பதை  ஆராயுமாறு கொழும்பு பிரதான நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்,18 ம் திகதிக்குள் இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அவர் கோரியுள்ளார்,
கொழும்பு 7 இல் உள்ள குறிப்பிட்ட வீடு சிவா சின்னத்தம்பி என்பவரிற்கு சொந்தமானது. பின்னர் அது கொழும்பு பல்கலைககழகத்திற்கு வழங்கப்பட்டது. குறிப்பி;ட்ட வீட்டின் சாவிகள் கறுவாத் தோட்ட பொலிஸரிடமிருந்த வேளை யாரோ அந்தவீட்டிலிருந்த பல மில்லியன் பெறுமதியான கலைப்பொருட்களை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தங்களால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியபாதுள்ளதாகவும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியை நாடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை முன்னாள் உயர்கல்வியமைச்சர் எஸ்பி திசநாயக்க சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி தவராஜா முன்னாள அமைச்சர் குறிப்பிட்ட திருட்டுடன் தொடர்புபட்டடிருந்தார் என ஊடகங்களில் வெளியான செய்திகளால் தனது கட்சிக்காரர் மன உளைச்சலிற்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னரே கலைப்பொருட்கள் களவாடப்பட்ட விடயத்தில் முன்னாள் உயர்கல்வியமைச்சர் சந்தேகநபரா என்பதை  ஆராயுமாறு கொழும்பு பிரதான நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
SHARE