16 வருடங்களுக்கு முன்பே 4 பந்தில் 4 சிக்ஸர் அடித்த இந்திய வீரர்

206

625.500.560.350.160.300.053.800.748.160.70 (3)

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய ஒருநாள் போட்டியில் ஜாகீர்கான் 4 பந்தில் 4 சிக்ஸர் அடித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

கடந்த 2000 ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் என்ற நகரில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் 3 வது ஒருநாள் போட்டியில் மோதின, இதில் ஜிம்பாப்வே அணியின் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஹென்ரி ஒலங்கோ விசீனார், முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ஓட்டங்கள் எடுக்கப்பட்டது.

அடுத்து 3 வது பந்தை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் எதிர்கொண்டார், ஒலன்கோ 3 வது பந்தை புல்டாஸ்சாக வீச அப்பந்தை லெக் திசையில் சிக்ஸர் அடித்தார்.

யாரும் எதிர்பாராத வகையில் 4 வது மற்றும் 5 வது பந்தையும் சிக்ஸர் பறக்கவிட்டார், இதனால் கடைசி பந்தை சற்று கோபத்துடன் வந்து வீசினார்.

ஆனால் அப்பந்து அகலப் பந்தாக மாறியது, இதனால் நிலை குலைந்த ஒலங்கோ கடைசி பந்தை ஓபியாக போட்டார் அதையும் விட்டுவைக்காமல் சிக்ஸர் பறக்கவிட்டார், இப்போட்டியில் ஜாகீர்கான் 11 பந்துகளில் 32 ஓட்டங்கள் குவித்தார்.

மேலும் இப்போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

SHARE