2 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு

290
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மீதமிருக்கும் 2 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி இன்று தெரிவு செய்யப்படவுள்ளது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் 3 ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

இந்நிலையில் மீதமிருக்கும் 2 ஒருநாள் மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வுக் குழுவினர் புதுடெல்லியில் இன்று கூடி தெரிவு செய்கின்றனர்.

SHARE