20 வயதிற்குள் இறக்கப் போகும் சிறுவன். கனடிய மக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்.!

152

கனடாவில் 10 வயது சிறுவன் அரிய வகை நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவனுக்கு 800-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளதுடன், கிறிஸ்துமஸ் கார்டுகள் போன்ற பரிசுப் பொருட்களை அனுப்பியுள்ளனர்.

கனடாவின் Manitoba நகரத்தில் இருக்கும் Winnipeg பகுதியைச் சேர்ந்த சிறுவன் Sheldon Steuart(10), இச்சிறுவனுக்கு உயிரைக் கொள்ளும் அரிய வகை நோயான Batten என்ற மரபணு நோய் ஏற்பட்டுள்ளது.

இந்த நோய் இவருக்கு இருக்கிறது என்பது இந்த ஆண்டு தான் தெரியவந்தது, குறித்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 20 வயதிற்குள் இறந்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நோயின் தாக்கத்தின் காரணமாக Sheldon Steuart உடல் நிலை மோசமாகிக் கொண்டே சென்றது, இதனால் அவன் நன்றாக பேசும் தன்மையை இழந்துள்ளான், இப்படி தன்னை ஒரு தனிமையில் உணர்வதாகவும், அவன் மிகவும் வருத்தப்படுவதாகவும் கூறி அவர் தாய் மிகுந்த வருத்ததில் இருந்துள்ளார்.

அதுமட்டுமின்றி கிறிஸ்துமஸ் வேறு வருகிறது, அவன் இந்த கிறிஸ்துமஸை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்

இதைத் தொடர்ந்து பேஸ் புக் பக்கத்தில் Sheldon Steuart ஒரு தனிமையை உணர்கிறான், அவன் மிகவும் சோர்விழந்து காணப்படுகிறான், இதனால் அவனுக்கு இந்த கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி மிகுந்த கிறிஸ்துமசாக இருக்க வேண்டும் என்பதால் ஒரு 20 பேர் வாழ்த்துக்கள் அனுப்பினால், அவன் மிகவும் மகிழ்ச்சியடைவான் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதன் பின் கடந்த சனிக் கிழமை Sheldon Steuart-க்கு 800-க்கும் மேற்பட்ட கிறிஸ்துமஸ் கார்டுகள், வாழ்த்துக்கள், ஓவியம் வரைவதற்கு கிரையான்ஸ் போன்றவைகளை மக்கள் அனுப்பியுள்ளனர்

SHARE