4 வயது சிறுமிக்கு 9 வது படிக்கும் வாய்ப்பு

191

4 வயது சிறுமிக்கு 9 வது படிக்கும் வாய்ப்புக் கிடைத்திருப்பது உத்தரபிரதேச மாநில மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

4 வயது சிறுமிக்கு 9 வது படிக்கும் வாய்ப்பு
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தேஜ் பகதூர்-சாயா தேவி தம்பதியினரின் இளைய மகள் அனன்யா சர்மாவுக்கு 4 வயது 8 மாதம் முடிவடைந்துள்ளது.

இந்த வயதில் எல்லாக் குழந்தைகளையும் போல அனன்யா எல்.கே.ஜி படிக்கப் போகவில்லை. மாறாக இந்த சிறிய வயதிலேயே நேரடியாக 9 வது படிக்கும் வாய்ப்பு அந்தக் குழந்தைக்குக் கிடைத்துள்ளது.

இதன் மூலம் தனது சகோதரி சுஷ்மா வர்மா 7 வயதில் 10 வது முடித்த சாதனையை அனன்யா முறியடித்திருக்கிறார். இது குறித்து மாவட்ட கல்வி ஆய்வாளர் உமேஷ் திரிபாதி ‘அனன்யா மிகவும் திறமையானவர். தற்போது இந்தி மொழியை அவள் திறமையாக பேசுகிறாள்.

மேலும் 9 வது புத்தகங்களையும் அவள் எளிதாக வாசிக்கிறாள். இதனால் நேரடியாக 9 வது படிக்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைத்திருக்கிறது’ என்றார்.

அனன்யாவின் தந்தை தேஜ் பகதூர் ‘அனன்யா 1 வயது 9 மாதங்களிலேயே ராமாயணம் மற்றும் சுந்தர காண்டம் போன்ற புத்தகங்களை சரளமாக வாசிப்பாள்.

படி என நாங்கள் ஒருபோதும் அவளை வற்புறுத்தியதில்லை. இந்த மாதிரி அதிசய குழந்தைகள் இருப்பதால் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பமாக உணர்கிறோம்’ என தெரிவித்தார்.

தேஜ் பகதூர் குடும்பத்திற்கு இந்த சாதனை ஒன்றும் புதிதல்ல. அனன்யாவின் சகோதரன் சைலேந்திரா தனது 14 வயதில் பிசிஏ முடிக்க, சகோதரி சுஷ்மா 15 வயதில் பிஹெச்டி படிக்கும் வாய்ப்பைப் பெற்றார். சுஷ்மாவின் 7 வயதில் 10 வது படிப்பை முடித்ததற்காக இளைய மாணவர் என்ற பட்டத்துடன் சுஷ்மா ‘லிம்கா’ புத்தகத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.girl-get

SHARE