600 சிரியா அகதிகளை நியூசீலாந்து அரசாங்கம் ஏற்பதாக அறிவித்துள்ளது்

264
நியூசீலாந்து அரசாங்கம் தனது வருடாந்த அகதிகளுக்கான ஒதுக்கீட்டுத் தொகையான 750 இல் அவசரகால ஒதுக்கீடாக 600 சிரியா  அகதிகளை எடுப்பதுடன் -மொத்தமாக 750 அகதிகளை எடுப்பதாக அறிவித்துள்ளது. பொதுமக்களினதும் எதிர்க்கட்சிகளினதும் நெருக்குதலின் அடிப்படையிலேயே உடனடியாக இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது. தனது வருடாந்த அகதிகள் உள்வாங்கும் தொகையை அதிகரிக்காத நிலை இருப்பதாக தெரிவித்துள்ள அரசு- இன்றுள்ள  ஐரோப்பிய அகதிகள் நெருக்கடி  நிலைமையைக் கருத்தில் கொண்டு 750 சிரிய அகதிகளை அடுத்துவரும் ‘உள்  கொள்ளலில்    ”  (intake )  எடுக்கப்படும் எனவும் முதலில் 600 பேர் எடுக்கபடுவார்கள் என்றும்  அறிவிக்கபட்டுள்ளது.  இந்த ஆண்டின் கணக்கில் 100 பேரும் அடுத்து வரும் ஆண்டுகளில் 500 அகதிகளும் சிரியாவுக்கு ஒதுக்கப்படும் என்று  அறிவிக்கப்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அகதிகள்  உடன்படிக்கையின் படி நியூசீலந்து வருடம் தோறும்  750 அகதிகளை உள்ளே எடுத்து வருகின்றது.இதில் அகதி அந்தஸ்துக் கோரி  விசாரணைகளின் பின்னர் அகதி அந்தஸ்து வழங்கப் பெற்றவர்களும் அடங்குவர்.
ஐரோப்பாவில் அதிகரிக்கும் அகதிகள் நெருக்கடி நிலைமைகளைக் கருத்தில் கொண்டு  இந்த 750 என்ற தொகையை இரண்டாக அதிகரிக்கும்படி பச்சைக் கட்சி கேட்டிருந்தது.
பிரதான எதிர்க் கட்சியான தொழில் கட்சி இன்னும் காத்திராமல் – உடனடியாக அவசரகால நிலைமையில்- அகதிகளை உள்-வாங்க உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டிருந்தது
நியூசீலந்தின் பிரதான நகரங்களின் மேயர்கள் தங்கள்  அகதிகளை உள்வாங்கும்  வசதிகள் உள்ளதாகவும் வருடாந்தத் தொகையை 1500 ஆக மாற்றும்படியும் கேட்டிருந்தனர்
பிரதம் ஜோன் கீ   இதுபற்றி விளக்குகையில் எதிர்க்கட்சிகளுக்கு உடனடியாக எழுந்து கேட்பது இலகு என்பதுடன்- தற்போது நியூசீலாந்து வருடந்தோறும் அகதிகளுக்காக்ச் செய்துவரும் சேவைகள் பற்றியும் வெளிநாடுகளிலும் அது அகதிகள் சேவைகளுக்கு செலவு செய்யும்  நிதித் தொகையையும் குறிப்பிட்டு- உடனடியாக இவர்களைக் கொண்டு வந்து இறக்கும்போது கவனிக்கப்பட வேண்டிய – இவர்கள் தொகைக்கு ஏற்ப மொழிபெயர்பாளர்கள் – சுகாதார சேவைகள் கல்வி போன்ற
விடயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
SHARE