7 வயது சிறுவனுக்கு வந்த ராணுவ ஆள்சேர்ப்புக் கடிதம்.!

205

ரஷ்யாவில் ஏழு வயது சிறுவனுக்கு, ராணுவத்தில் சேர்வதற்காக வந்த கடிதம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாஷா கமன்யூக் என்ற சிறுவனுக்கு, Ussuriysk பகுதியில் உள்ள ராணுவத்திற்கு ஆளெடுக்கும் அலுவலகத்திலிருந்து வந்த கடிதத்தில், ஒராண்டு ராணுவ பயிற்சியில் இணைவதற்காக, உள்ளூரிலுள்ள ராணுவ அலுவலகத்தை அணுகும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோல, இன்னொரு ஏழு வயது சிறுவனுக்கு கடிதம் வந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறினாலும், ரஷ்ய ராணுவம் அதை தொடர்ந்து மறுத்து வருகிறது.

2001ஆம் ஆண்டு பிறந்தவர்களின் பட்டியலை அனுப்புவதற்கு பதிலாக, 2010ஆம் ஆண்டு பிறந்தவர்களின் பட்டியலை குழந்தைகள் மருத்துவமனை தவறுதலாக அனுப்பிவிட்டது என்று ராணுவதிற்காக ஆட்களை சேர்க்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், கடிதம் பெற்ற சிறுவன், ராணுவப்பணிக்காக சேர வேண்டாம் என்றும், அவர் ராணுவ அலுவலகத்திற்கு வராதமைக்காக தண்டிக்கப்படமாட்டார் என்றும் உறுதி செய்துள்ள அவர்கள்,இந்த கடிதம் குறிப்பிட்ட இளைஞர்களை தயார் செய்வதற்கான வரைவு தயாரிக்க அழைக்கப்பட்ட கடிதம் மட்டுமே, பணியில் உடனடியாக சேர்வதற்கான கடிதமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே சிறுவனின் குடும்பத்தினர் அந்த கடிதத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர். அது தற்போது வைரலாக வலம்வரத் தொடங்கியுள்ளது

SHARE