கொதித்து எழுந்த மலேசிய தமிழர்கள்: பின் கதவால் தப்பியோடிய மகிந்த ராஜபக்ஷ – வீடியோ இணைப்பு

260

 

கொதித்து எழுந்த மலேசிய தமிழர்கள்: பின் கதவால் தப்பியோடிய மகிந்த ராஜபக்ஷ – வீடியோ இணைப்பு
September 03
04:112016

நேற்று முன் தினம் ராஜபக்ஷ மலேசியா சென்றிருந்த விடையம் யாவரும் அறிந்ததே. அவர் நினைத்துப் பார்க்காத ஒன்று நடந்து முடிந்துள்ளது. தான் மலேசியா சென்றால் அங்கே எந்தப் பிரச்சனையும் வராது என்று அவர் நினைத்துக்கொண்டு அங்கே செல்ல. அங்குள்ள உணர்ச்சி மிக்க தமிழர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதேவேளை நூற்றுக்கணக்கான மக்கள் அவர் தங்கியிருந்த ஹோட்டலை முற்றுகையிட்டுள்ளார்கள்.

மேலும் இலங்கை அரசின் தூதரகமும் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது. இதனை அடுத்து முன் கதவால் வெளியே செல்வது சாத்தியம் இல்லாததால்.
பின் கதவு வழியாக மகிந்த ஒரு வெள்ளை நிற BMW காரில் ஏறிச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளார்கள். மேலும் சிலர் போராட்டத்தை வீடியோவாக எடுத்து இணைய தளங்களிலும் பதிவேற்றி உள்ளனர். அதற்கு இணையாக மலேசிய தமிழர்கள் மகிந்தவுக்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை நடத்தி தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்தது மட்டுமல்ல. ஈழத் தமிழர்களுக்கு நாம் எப்பொழுதும் துணை நிற்போம் என்று எடுத்துக்காட்டியுள்ளார்கள்.

சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளில் வாழ்ந்தாலும், தமிழ் இன உணர்வு மட்டும் எம்மிடையே மிஞ்சி உள்ளதனை நினைத்துப் பார்க்கையில் உணர்ச்சி பொங்குகிறது.

SHARE