80 பருந்துகளுடன் பறந்த விமானத்தால் பெரும் பரபரப்பு

156

சவூதிஅரேபிய இளவரசருடன், 80 பருந்துகள் விமானத்தில் பயணம் செய்த புகைப்படம் இணைய தளத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், ஏராளமான பருந்துகளை வளர்த்து வருகிறார். அண்மையில் அவர் விமானத்தில் பயணித்தபோது, அவருடன் 80 பருந்துகளும் பயணம் செய்துள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் மனிதர்களுக்கு நிகராக பருந்து இன பறவைகள் கருதப்படுகின்றன. சவூதி அரேபியா உள்ளிட்ட பல மத்திய கிழக்கு நாடுகள், பருந்துகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு தடை வித்தித்துள்ளனர்.

குறித்த நாடுகளில், பருந்து இன பறவைகளுக்கு தனித்துவம் அளிக்கப்படுவதோடு, அவற்றிக்கான தனி இட ஒதிக்கீடுகளும் பேனப்படுகின்றன. மேலும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய பறவையான பருந்திற்கு குறிப்பிட்ட சில இஸ்லாமிய நாடுகளுக்கு செல்வதற்கு, தனியான கடவுசீட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 80 பருந்துகளுக்கும் சவூதி இளவரசர் தனி ஆசனங்களை பதிவு செய்திருந்தார். குறித்த பருந்துகளுக்கு விமானத்தின் நடுப்பகுதி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் அவை பறக்காமல் இருக்கும் வகையில் கட்டப்பட்டிருந்துள்ளது.

இதுகுறித்த படங்களை விமானி ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டதை தொடர்ந்து அநேகமான நாடுகளில் குறித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE