வட மத்திய மாகாண சபையில் நேற்று ஏற்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவே பொறுப்பாளி என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பசில் ராஜபக்ச கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் 2ஆம் திகதி இந்த சிக்கலை ஏற்படுத்தியதாகவும், ஐக்கிய தேசியக் கட்சி தெரிவு செய்த மாகாண சபையின் தலைவரை அந்த கட்சியே நீக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மத்திய மாகாண சபையில் நேற்று நடந்த சம்பவமானது கூட்டு எதிர்க்கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான மோதலே அன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.