அரச ஊழியர்களின் பண்டிகை முற்கொடுப்பனவு 10,000 ரூபாவாக உயர்த்தப்படும் –  கரு ஜயசூரிய

285
அரச ஊழியர்களின் பண்டிகை முற்கொடுப்பனவு 10,000 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது என பொதுநிர்வாக அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு தற்போது பண்டிகை முற்கொடுப்பனவாக 5000 ரூபா வழங்கப்படுகின்றது. அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகளின் விலைகளை கருத்திற் கொண்டு பண்டிகை முற்பணத் தொகையை உயர்த்துமாறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

இதுவரை வழங்கப்பட்ட 5000 ரூபாவினை பத்தாயிரம் ரூபா வரையில் உயர்த்துமாறு கோரப்பட்டதாகவும் அந்தக் கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும் அரச தனியார் தொழிற்சங்க பேரவையின் அழைப்பாளர் சமன் ரத்னப்பிரிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த முற்பணத் தொகை பத்து மாதங்களில் மீள அறவீடு செய்யப்பட உள்ளது. எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலத்தில் இந்த பண்டிகை முற்கொடுப்பனவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE