நிலக்கடலையின் ஓட்டில் காற்றை சுத்தம் செய்யும் சாதனம்

280
தற்போது அதிகரித்துக்காணப்படும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களினால் வளிமண்டலம் விரைவாக மாசடைந்துவருகின்றது.இதன்காரணமாக ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்துவதற்காக சுத்தமான காற்றினை சுவாசிப்பதற்கு பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அவற்றின் விளைவாக நிலக்கடலையின் ஓடுகளினைப் பயன்படுத்தி காற்றை சுத்திகரிக்கக்கூடிய சாதனம் (Air Filter) ஒன்றினை மெக்ஸிக்கோவின் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இவற்றில் வளரும் Fusarium வகை பங்கஸ் மற்றும், Brevibacterium வகை பக்டீரியா என்பன இணைந்து நச்சுப் பதார்த்தங்களை காபனீரொட்சைட் ஆகவும், நீராகவும் மாற்றுகின்றன.

மேலும் இவ் உபகரணத்தில் மேற்கண்ட உயிரினங்கள் வளர்வதற்கு 28 நாட்கள் வரை எடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE