புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளதாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அறிக்கை?

163

தமிழீழ விடுதலைப் புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள்மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

LTTE_Training_in_January_2006_Mark0102_111

ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரி ஒருவரான யாஸ்மீன் சூகாவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸிஸ் அருட்தந்தை தமக்கு தகவல்களை வழங்கியதாக சூகா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் 200 பேர் காணாமல் போயுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை உண்மைக்கு புறம்பானது என இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயிருந்தால் யார் போர் செய்தார்கள் என சிரேஸ்ட அதிகாரியொருவர் சிங்கள ஊடகமொன்றிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகம் பற்றிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் 200 புலித் தலைவர்கள் காணாமல் போயுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

SHARE