Nokia 8 கைப்பேசி அறிமுகமாகும் தினம் வெளியானது!

195

நோக்கியா நிறுவனம் முதன் முறையாக கூகுளின் அன்ரோயிட் இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்துள்ளது.

இவ்வருடத்தில் ஏற்கனவே தனது Nokia 3, Nokia 6 ஆகிய கைப்பேசிகளை அறிமுகம் செய்துள்ள நிலையில் Nokia 8 கைப்பேசியினையும் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் இம் மாதம் 31 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியின் விலையானது 589 யூரோக்களாக காணப்படுகின்றது.

இதேவேளை மற்றுமொரு கைப்பேசியான Nokia 9 ஆனது இதனைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Nokia 8 கைப்பேசியின் சிறப்பம்சங்களாக 5.3 அங்குல அளவுயை QHD தொடுதிரை, Snapdragon 835 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை கொண்டுள்ளது.

SHARE