UN மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் தொடர்பிலான விபரங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

227

அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான விபரங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தீர்மானம் குறித்த ஆவணத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றில் சமர்ப்பி;த்துள்ளார்.
இதேவேளை, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நிறுவப்பட்ட இரண்டு முக்கிய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிசாந்த உதலாகம தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையும், மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென மஹிந்த ராஜபக்ஸ ஆதரவு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன் அடிப்படையில் எதிர்வரும் 22ம் மற்றும் 23ம் திகதிகளில் பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
விவாதம் நடத்தப்பட உள்ள நிலையில் தங்களுக்கு ஆவணங்கள் கிடைக்கவில்லை என அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE