சட்டவிரோதமாக அரிமரங்களை கடத்தி சென்ற மூன்று சந்தேகநபர்கள் ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நொச்சிகுளம் காட்டுப்பகுதியில் மரங்கள் கடத்தப்படுவதாக நேற்று காலை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் குறித்த காட்டுப்பகுதிக்கு சென்ற பொலிஸார், விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் வவுனியாவை சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களிடம் இருந்து கப் ரக வாகனம் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யபட்டவர்கள் விசாரணைகளின் பின் இன்றைய தினம் நீதிமன்றில்ஆஜர்படுத்தப்படவுள்ளனர். ...
உணவில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். மேலும் உடலில் ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம். இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும் உணவுகள் தாமரைத் தண்டில் அதிக அளவு இரும்புச்சத்து விட்டமின் சி உள்ளதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல மாற்றத்தை உணர முடியும். சுண்டைக்காயில் உள்ள கசப்பு வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும். ரத்தம் உடலில்...
நபர் ஒருவரை சித்திரவதைக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதனையடுத்து இவ் விடயம் தொடர்பில் மஹர நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதுடன், விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந் நிலையிலேயே அவர் நேற்றிரவு களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட 3 பரீட்சார்த்திகளை சந்தேகத்தின்பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நேற்று இடம்பெற்ற கணிதபாடத்தின் போது மோசடியில் ஈடுபட்ட 3 பரீட்சார்த்திகளே இவ்வாறு சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பரீட்சார்த்திகள் கல்முனை, தனமல்வில மற்றும் திககொட ஆகிய பிரதேசங்களில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். குறித்த 3 பரீட்சார்த்திகளும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக...
  பூகோள அரசியல் மாற்றங்கள் இலங்கையில் எத்தகைய செல்வாக்கைச் செலுத்துகின்றன? தமிழர் பிரச்சினைக்கான தீர்வில் இதன் தாக்கம் என்ன என்பது தொடர்பாக, அண்மைக்காலத்தில் தமிழர் அரசியல் பரப்பில் சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியப் பெருங்கடலின் மையத்தில், கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் அமைந்திருப்பதால், பூகோள அரசியல் மாற்றங்களின் ஒவ்வொரு கட்டத்திலும், இலங்கைத் தீவு அதன் தாக்கத்துக்கு உட்படுகிறது. அதுவே தொடர்ந்தும் நிகழப்போகிறது. இது எவராலும் மாற்றப்பட முடியாத ஒரு விதியாகவே நீளும். அகிம்சைப்...
    கடந்த ஆண்டு அரசியற்கைதிகள் போராடிய போது அதில் யாழ் பல்கலைக்கழகமும் பங்குபற்றியது. கைதிகளுக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுத்த சமூக அமைப்புக்களின் பிரதிநிதியாக அருட்தந்தை சக்திவேல் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது ‘நாங்கள் தலையிட்டால் அது உச்சக்கட்டப் போராட்டமாக இருக்க வேண்டும்’ என்று மாணவர்கள் கூறினார்கள். முடிவில் மாணவப் பிரதிநிதிகளும், சில அரசியல்வாதிகளும் சிறைச்சாலைக்குப் போனார்கள். அரச தரப்பைச் சேர்ந்த அங்கஜன் வழங்கிய வாக்குறுதிகளையடுத்து கைதிகள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்கள். ஆனால்...
  ஒழுங்கும், நேரான இலக்குமுள்ள, வஞ்சக உள்ளமற்ற, நேர்மையான தலைவனொருவனைக் காணும் பாக்கியத்தை இலங்கை எனும் தேசம் பெறவேயில்லை. தலைவனாக முகமூடியணிந்தவாறு, நாட்டு மக்களை பலிகடாக்களாக்கி விளையாடும் கோமாளிகளும், சுயநலவாத நரிகளும் ஆட்சிக்கு வந்து தேசத்தைச் சூறையாடுவதையே எப்போதும் செய்து கொண்டிருக்கிறார்கள். தமது கையாலாகாத்தனத்தை மூடி மறைப்பதற்காக அடுத்தவர் மீது பழி சுமத்தும் தலைவர்கள் இலங்கையை மீண்டும் மீண்டும் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எனும் பொய்காரரை ஜனாதிபதியாக ஆக்கியது...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஒப்பாக ஐக்கிய தேசியக்கட்சி மேற்கொண்ட வகை தொகையற்ற படுகொலைகளை இன்றும் வடக்கு கிழக்கில் முக்கியமாக காணலாம். அந்த இரத்தங்கள் இன்னும் காயவில்லை. மக்கள் அழுகுரல்கள் இன்னும் ஓயவில்லை. அதற்குள் ஐக்கிய தேசியக்கட்சியுடன் எப்படி கைகோர்க்க முடிகிறது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன சப்பை கட்டை கட்டினாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. 1977 ஆம் ஆண்டு போரா சமாதானமாக என்ற தமிழ் மக்களுக்கு எதிரான...
கொழும்பு - மட்டக்குளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி  பிரயோகத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இச்சம்பத்தில் பெண் ஒருவர் உட்பட ஐந்து பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார் . மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு ஆயுததாரிகளே முச்சக்கரவண்டி ஒன்றின் மீது குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொணடுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதேவேளை, ஆயுததாரிகள் இனங்காணப்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்...
யாழ்ப்பாணம் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் அடையாள நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் ஆலய முன்றலிலிருந்து மனித உரிமையை பிரகடனப்படுத்தும் பதாகைகளை தாங்கியவாறு ஊர்வலகமாக துர்க்காதேவி மண்டபம் வரை இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் யாழ். மனித உரிமைகள் முதலுதவிச் சங்கம் மற்றும் இலங்கை சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் மனித உரிமைகள் தின நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்,...