ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாட்டின் இன்றைய நிலைமை மற்றும் அதிலிருந்து மீள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்தார். ஜனாதிபதியின் முழுமையான உரை கீழே... சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே, அன்பான நாட்டு மக்களே, உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே, அன்புள்ள குழந்தைகளே, நான் இன்று...
அபு அலா 75வது சுதந்திரதினமான இன்று காப்போம் தொண்டு நிறுவனத்தினால் திருகோணமலை - புதுக்குடியிருப்பு கிராமத்தில் கல்விகற்கும் வறிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதனிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது. காப்போம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதிப்கரன் (திலிப்) கலந்துகொண்டு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகளை போன்றவற்றை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் காப்போம்...
இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ் நாட்டில் காரைக்குடியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில்...
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு தடை விதித்து நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் பேரவையின் அழைப்பாளர் வணக்கத்திற்குரிய கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீர்வுகளை முன்வைப்பதற்காக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டார். ஆபிரிக்க தூதுவர்களை நேற்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இச்சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார கொள்கையின் புதிய கட்டம் தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி, சிரமமான காலகட்டத்தின்போது இலங்கையும் ஆபிரிக்காவும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்கியமையையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். மேலும் இலங்கைக்கும் சில ஆபிரிக்க நாடுகளுக்கும் பொதுவான...
அபு அலா இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 75வது தேசிய சுதந்திரதின திருகோணமலை மாவட்ட பிரதான நிகழ்வு இன்று (04) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அரசாங்க அதிபர் வி.எச்.என். ஜெயவிக்ரம தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாகதிருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள மற்றும் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்கா ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது, மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.  ரத்நாயக்காவினால் தேசியக் கொடியெற்றி வைக்கப்பட்டதன் பின்னர் எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படை...
கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று இடம்பெற்ற இலங்கையின் 75வது தேசிய சுதந்திரதின வைபவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த இவர் சமீபத்தில் பத்ம பூஷன் விருது பெற்றார். வாணி ஜெயராமின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மறைவால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். maalaimalar
அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வு புகாரை அடுத்து அதானி குழும பங்குகள் வேகமாக குறைந்து வந்த காரணத்தால், அதானி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார். இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறியுள்ளார். கவுதம் அதானி 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 2-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு...